லேப்டாப்பை எளிமையாக பராமரிப்பது எப்படி?

உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்று சில உள்ளன. காலப்போக்கில் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டே போகிறது. உதாரணத்திற்கு கைபேசி, கணினி போன்றவைகளை சொல்லலாம். இன்றைய உலகத்தில், கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. அது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள்
என்ற நிலைக்கு வந்து விட்டது. கணினி என்றால் அதில் மடிக்கணினியும் அடக்கம். ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை உங்களுக்கு அளிக்கிறது இந்த மடிக்கணினி. 

மடிக்கணினி இருக்கிறதா? அப்படியானால் அது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவீர்கள். ஏன் அது உங்கள் வாழ்க்கையாகவே இருக்கலாம். இது அவ்வளவு முக்கியம் என்றால் இதற்கும் தேவையான அளவு காதலும் பராமரிப்பும் தேவை தானே. அதனால் மடிக்கணினியை சிறந்த முறையில் பராமரிக்க சூப்பர் டிப்ஸ், இதோ:

திரை : மடிக்கணினியின் திரை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மடிக்கணினி நன்றாக வேலை செய்யும் நிலையில் இருந்தாலும், திரையை துடைக்கும் போது கவனம் தேவை. சரியான பொருட்களை கொண்டு திரையை துடைக்க வேண்டும் இல்லையெனில் அது திரையை சேதமடைய செய்யும். கைவிரல்களை கொண்டு திரையை துடைக்காதீர்கள். அது கைத்தடங்களை திரையின் மேல் பதியச் செய்யும். மேலும் திரையை பலமாக அழுத்தினால் அது சேதமடையவும் வாய்ப்புகளும் உண்டு.

குளிர்ந்த சூழல் : மடிக்கணினியை எப்போதும் நல்ல சூழலில் வைத்திருங்கள். பயணம் செய்ய நேரிட்டால், மடிக்கணினி பத்திரமாக இருக்க அனைத்து முன் எச்சரிக்கையையும் செய்யுங்கள். பயணத்தில் அதை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, மடிக்கணினிக்கு தேவையான அளவு சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதனை தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கியே வைய்க்கவும்.

ஆண்டி வைரஸ் : ஆண்டி வைரஸ் மென்பொருள் சந்தையில் பல வகைகள் உள்ளன. அசல் உரிமத்துடன் ஒரு மென்பொருளை வாங்கி, மடிக்கணினியில் நிறுவுங்கள். வைரஸ் மடிக்கணினியை வெகுவாக பாதிக்கும். மடிக்கணினியின் வேகத்தை குறைப்பது முதல் அதன் செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் வரை வைரஸ் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

உணவு மற்றும் பானங்கள் : பசிக்கிறதா? அப்படியானால் மேஜைக்கு சென்று தான் உணவருந்த வேண்டும். சிப்ஸ் அல்லது மற்ற நொறுக்குத் தீனிகளை மடிக்கணினி அருகே கொண்டு வராதீர்கள். நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது மடிக்கணினியில் எந்த உணவும் பானமும் சிந்தக் கூடாது.

சரியான பேக் : மடிக்கணினியை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள். மேலும் மடிக்கணினிக்கு ஏற்ற அளவில் ஒரு பேக்கை வாங்கவும். அது மடிக்கணினியை பாதுகாக்கும்.

கீழே போட்டு விடாதீர்கள் : மடிக்கணினியை கல்லூரி அல்லது அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அறிந்த ஒன்றே. ஆனால் மடிக்கணினியை கீழே போட்டு விடும் தவறை செய்யாதீர்கள். மெட்ரோ இரயில் அல்லது பேருந்துகளில் செல்லும் போது, உங்கள் கையில் இருக்கும் மடிக்கணினி பை கீழே விழாமலும் யாரும் தூக்கிச் செல்லாமலும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

மின்சாரம் : உணவு உண்ணுவதற்கு செல்லும் போதோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் போதோ மடிக்கணினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடிக்கணினிக்கு அதிக ஆயுளை தரும்.

அதிக நேரம் : தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் ஓட விடாதீர்கள். தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், மடிக்கணினி அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும். மடிக்கணினியின் ஆயுள் நீடிக்க வேண்டுமென்றால், உபயோகிக்காத நேரத்தில் ஷட் டௌன் செய்யுவம்.

பயர்வால் : கணினி வாங்கும் போதே ஃபயர்வால் நிறுவப்பட்டிருக்கும். அது இல்லையென்றால் உங்கள் கணினியை பாதுகாக்க ஃபயர்வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.

சுத்தப்படுத்தவும் : மடிக்கணினியை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும். நம்மில் சில பேர் ஆரோக்கியமாக இருந்தும் வருடத்திற்கு ஒரு முறை நம் உடல்நலத்தை பரிசோதிக்க மருத்துவரை அணுகுவோம். அதே போல் மடிக்கணினியும் குறிப்பிட்ட காலத்தில் வல்லுனரால் சோதித்து பார்க்கப்பட வேண்டும்.

தட்டையான பரப்பு : எப்போதும் மடிக்கணினியை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது மடிக்கணினியை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும். உங்கள் மெத்தையின் மேல் வைத்திருந்தாலும் கூட, மெத்தையில் இருக்கும் தூசிகள் மற்றும் நார்களை மடிக்கணினியில் உள்ள மின் விசிறி உள்ளிழுக்கும். இதனால் மடிக்கணினியின் அடிப்பாகம் சூடாகும். அதனால் மேஜை போன்ற தட்டையான பரப்பை பயன்படுத்துங்கள்.

சுத்தப்படுத்துவும் : மடிக்கணினியை பராமரிக்க மிக எளிய வழிமுறை தான் இது. பல் தேய்க்கும் ப்ரஷ்ஷை பயன்படுத்தி மடிக்கணினியின் மின் விசிறி இடுக்கு, தட்டச்சுப்பலகையின் மேல் பதிந்திருக்கும் தூசியை சுத்தப்படுத்துங்கள். மெல்லிய துணியை பயன்படுத்தி திரையை துடைக்கவும்.

குளிரூட்டும் விசிறி : மடிக்கணினிக்கான குளிர்ச்சியை ஏற்படுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள். இது மடிக்கணினி அதிக சூடாக்குவதை தடுக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget