வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகள்

இப்போதெல்லாம் பட்டப் பகலிலே வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள். சின்னச் சின்ன திருட்டுக்களில் தொடங்கி, திட்டமிட்டு செய்யப்படும் கொள்ளை வரை அனைத்துமே பெரும்பாலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் நேரங்களிலோ, வீடு பூட்டியிருக்கும் நேரங்களிலோ நடப்பவைதான்! 

நம் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களையும், உயிரையும் பாதுகாக்க என்னவெல்லாம் சாதனங்கள் கடைகளில் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம். கதவில் பொருத்தப்படும் 'லென்ஸ்'-ன் லேட்டஸ்ட் வடிவம்தான் 'வீடியோ டோர் போன்'. இதன் மூலம் கதவுக்கு வெளியே இருக்கும் நபரை வீட்டினுள் இருந்தபடியே பார்க்கலாம். 

இதில் இருக்கும் 'ஸ்பீக்கர் போன்' மூலம் அந்த நபரிடம் பேசலாம். கதவின் உட்புறம் தாழ்ப்பாள் போடும் இடத்தில் பொருத்த முடிகிற அயிட்டம் 'மேக்னடிக் சென்ஸார்'. இதைப் பொருத்தி விட்டால், கதவு லேசாக திறந்தாலும், அலாரம் அடிக்கும். 

வீட்டின் மேற் கூரையில் (ஏழு அடி உயரத்தில்) 'மோஷன் சென்ஸார்' என்கிற உபகரணத்தைப் பொருத்தி விட்டால், இதன் எல்லைக்குள் யாராவது அல்லது ஏதாவது குறுக்கிடும்போது அலாரம் அடிக்கும். தேவையான நேரங்களில் மட்டும் இதை 'ஆன்' செய்து கொள்ள முடிவது இதில் ஸ்பெஷல்! 

இந்தக் கருவியைப் பொருத்தும் நிறுவனத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 'கஸ்டமர் கேர்' பிரிவு உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அலாரம் அலறினால், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 'கஸ்டமர் கேர்' பிரிவுக்கு தகவல் சென்று விடும். அந்த நிறுவனம், உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும். 

'ஃபிங்கர் பிரின்ட் லாக்'.......... இதைக் கதவில் பொருத்தி விட்டால், இதில் உள்ள சென்ஸாரில் கட்டை விரலை வைத்து, நாலு இலக்க பாஸ்வேர்டை தந்தால்தான் கதவு திறக்கும். இதில் சுமார் 120 ரேகைகள் வரை பதிவு செய்து கொள்ளலாம். 

நாம் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் வீட்டில் நடக்கிற எல்லா நிகழ்வுகளையும் கேமராவுடன் இணைந்த 'கிளியர் சர்க்யூட் டி.வி' மூலம் பதிவு செய்யும் வசதி தற்போது வந்து விட்டது. நாம் வெளியூரில் இருந்தால் சிறப்பு கட்டணம் செலுத்தி, இன்டர்நெட் மூலம் வீட்டைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்.

பழைய பதிவுகளை தேட