கோச்சடையான் டிரெய்லர்

ரஜினியின் கோச்சடையான் பட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதில் ரஜினி, தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கிஷெராப், நாசர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

3டி மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் இதை எடுத்துள்ளனர். ஹாலிவுட் நிபுணர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடையாததால் வெளியாகவில்லை. தற்போது டிரெய்லர் முழுமையாக தயாராகியுள்ளது.

ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் தீபிகா படுகோனே மீதான காதல் போன்றவை டிரெய்லரில் இடம்பெற்று உள்ளன. ரஜினி நேரில் பார்த்து ஆலோசனைகள் சொல்லி டிரெய்லரை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மெருகேற்றி உள்ளார்.

இந்த டிரெய்லர் இன்னும் சில தினங்களில் தியேட்டர்களிலும், டி.வி. மற்றும் இணைய தளங்களிலும் வெளியாக இருக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget