வியர்க் குருவை ஓட ஓட விரட்டுவது எப்படி?

கோடைக்காலம் என்றாலே வியர்வை ஊற்றெடுக்கும். வியர்வை வெளியேற்றத்தால் களைப்பு ஏற்படுகிறது. இதனை கோடை அயர்வு என்கிறார்கள். இந்த அயர்வை போக்கிட பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. 

பொதுவாகவே கோடை காலத்தில் செய்யப்படும் வேலைகளுக்கு
பிறகு பருவ காலங்களை விடிவும் கூடுதலான சக்தி செலவிட வேண்டியுள்ளது. கூடுதல் சக்தியின் தேவைக்கேற்ப வைட்டமின் தேவையும் கூடுகிறது. இந்த அடிப்படையிலான ஆய்வுகளில் கோடை அயர்வு நீங்குவதற்கு வைட்டமின் ‘சி‘ துணைபுரிவதாக அறியப்பட்டுள்ளது. 

சற்றே கூடுதவான வைட்டமின் ‘சி‘ தேவைப்படுவது வெப்ப நாட்களில் ஏற்படும் வியர்வையினால் அல்ல என்றும் கருதப்படுகிறது. ஆனால் உடல் இயக்கத்தின் போது நேரும் பலவித வளர்ச்சிதை மாற்றத்தினாலேயே இதன் தேவை அதிகமாகிறது. 

உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு உதவும் கொல்லஜன் என்னும் பொருளுக்கு வைட்டமின் ‘சி‘ தேவை. அதுபோலவே அமினோ அமிலம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் ‘சி‘ ரத்தக் குழாய்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ‘ நார்எபி நெய்ரின்‘ என்ற ரசாயனப்பொருள் சுரக்கவும், அட்ரினல் சுரப்பி ஸ்டிராய்டுகள் தயாரிக்கவும் துணை செய்கிறது. 

நாளமில்லாச் சுரப்பிகளை நிலைப்படுத்தவும் பயன்படுகிறது. நாள்தோறும 300 முதல் 500 மில்லி கிராம் வைட்டமின் ‘சி‘ உட்கொள்வதானது, வியர்க்குரு வராமல் தடுப்பதுடன் அது வந்துவிட்டால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. 

இயல்பாகவே இவர்களை வைட்டமின் ‘ சி‘ பற்றாக்குறையாளர்கள் என்று கருதிவிட வேண்டியது இல்லை. கோடை காலங்களில் வைட்டமின் ‘ சி ‘ யின் தேவை சற்று கூடுதல் ஆகும். தக்காளி, எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் ‘ சி‘ மிகுந்து காணப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட