விண்டோஸ் 7 இயங்குதளமும் புத்தம் புதிய வசதிகளும்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்கும் கம்ப்யூட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து இப்போதே மேம்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே தேர்ந்தெடுக்கின்றனர். வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். சிஸ்டத்தினைச் சீராகத் தங்கள் விருப்பப்படி வைத்திட
பலரும் டிப்ஸ்களை வழங்குமாறு கேட்டு வருகின்றனர். இவர்களுக்காக அனைவருக்கும் பயன்படும் குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

திரை காட்சியை மாற்ற: விண்டோஸ் 7 சிஸ்டம், நம் விருப்பத்திற்கேற்ப, மானிட்டர் திரைக் காட்சியினை மாற்றி மாற்றி அமைத்திட வழி தந்துள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய வசதி தரப்பட்டுள்ளது. உங்களுக்குப் பிடித்த ஒன்றுக்கு மேற்பட்ட இமேஜஸ் தேர்ந்தெடுத்து, அவற்றை அடுக்கி வைத்து, ஒவ்வொன்றாக, நீங்கள் திட்டமிடும் கால இடைவெளியில் இவை தோன்றும்படி அமைத்திடலாம். இதனை அமைத்திட, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Personalize என்பதனையும் அதன் பின், “Desktop Background.” என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் திரைக் காட்சியாகக் காட்ட விரும்பும் படங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள போல்டரைத் திறக்கவும். “Shuffle” என்ற பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த மறக்க வேண்டாம். இவற்றை அமைத்த பின்னர், இவை மாற வேண்டிய கால இடைவெளியை அமைக்க மறக்க வேண்டாம். அனைத்தும் ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் அனுபவித்துத் தேர்ந்தெடுத்த படங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாகவே தோன்றும். கம்ப்யூட்டர் தொடர்ந்து ஒரே படத்தைக் காட்டிக் கொண்டு பழசானதாகக் காட்சி அளிக்காது.

புதுவித கால்குலேட்டர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் முற்றிலும் புதுமையான கால்குலேட்டர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்ட்ர்ட் மற்றும் சயின்டிபிக் கணக்குகள் மட்டுமின்றி, புரோகிராமர் மற்றும் புள்ளியியல் கணக்குகளைத் தரும் பிரிவும் அடக்கம். அது மட்டுமின்றி, அலகுகளை மாற்றித் தரும் பார்முலாக்களும் இதில் கிடைக்கிறது. சீதோஷ்ண நிலை, எடை, பரப்பளவு, நேரம் என எதனையும் மாற்றிக் காணலாம். இவற்றுடன், கடன் தொகைக்கான வட்டி, மாத தவணை கணக்கீடு, வாகனங்களில் எரிபொருள் மற்றும் பயணிக்கும் தூர விகிதம் ஆகியவற்றையும் இதில் கணக்கிடலாம். அதற்கான டெம்ப்ளேட்டுகள் தயாராகத் தரப்பட்டுள்ளன.

புத்திசாலியான பிரிண்டிங் அமைப்பு: ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற வகையில், மாறா நிலையில் ஒவ்வொரு பிரிண்டரை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான அமைப்பினை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பிரிண்டரின் பெயரை நினைவில் வைத்து இயக்க வேண்டியதில்லை. விண்டோஸ் 7 சிஸ்டம் இவற்றை நினைவில் வைத்து இயக்கும்.

சோம்பேறி விண்டோக்களை விரட்ட: கர்சரை அசைப்பதன் மூலம் புரோகிராம்களை மறையச் செய்திடும் செயல்பாடு பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள். விண்டோஸ் 7 அதே தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, செயல்பாடு எதனையும் மேற்கொள்ளாமல், திறந்து வைக்கப்பட்டிருக்கும் விண்டோக்களை மூடி, புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டு வரும் வசதி கொண்டுள்ளது. நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவின் டைட்டில் பார் மீது, மவுஸ் இடது கிளிக் செய்து இரு பக்கங்களிலும் அசைத்தால், செயலற்று இருக்கும் விண்டோக்களில் உள்ள புரோகிராம்கள் அனைத்தும் மூடப்பட்டு, விண்டோக்களும் மூடப்படும். இவற்றை மீண்டும் கொண்டு வர, அதே வகையில் மீண்டும் அசைக்க வேண்டும்.

டெஸ்க்டாப் சுத்தப்படுத்தி வகைப்படுத்துதல்: மானிட்டர் திரையில் இருக்கும் ஐகான்களை, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Sort By” தேர்ந்தெடுத்து வகைப்படுத்துவோம். விண்டோஸ் 7 இன்னும் மிக எளிமையான வழி ஒன்றைத் தருகிறது. எப்5 பட்டனை அழுத்தியவாறு சிறிது நேரம் வைத்திருந்தால், ஐகான்கள் தாமாகவே ஒழுங்கு படுத்தப்படுகின்றன.

ரைட் கிளிக் பலவிதம்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ரைட் கிளிக் வசதி நம் ரகசிய நண்பனாக அமைக்கப்பட்டுள்ளது. நம் கம்ப்யூட்டர் அனுபவத்தினை இது மிக எளிமையாக்குகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். 
  • உங்கள் டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். உடன் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றி அமைக்கும் வசதி உங்களுக்குக் கிடைக்கும். 
  • டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள் எதன் மீதும் ரைட் கிளிக் செய்து அதனை டாஸ்க் பாரில் இருந்து எடுக்கலாம். (“Unpin this program from the Taskbar.”) 
  • டாஸ்க்பார் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, நாம் அடிக்கடி பார்த்த போல்டர்களை அணுகலாம்.
மறைக்கப்பட்ட ட்ரைவ்களைக் காண: மை கம்ப்யூட்டரில் டபுள் கிளிக் செய்து திறந்தவுடன், (உங்கள் கண்ணிலிருந்து) மறைக்கப்பட்ட ட்ரைவ்கள் காட்டப்படவில்லையா? Computer கிளிக் செய்து, டூல்பார் தேர்ந்தெடுத்து, Folder Options, View (tab) சென்று, “Hide empty drives in the Computer folder” என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி, மந்திரம் போட்டது போல, மறைத்து வைக்கப்பட்ட போல்டர்கள், ட்ரைவ்கள் காட்டப்படும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget