விண்டோஸ் 8 இயங்கு தளத்துக்கு அவசியமான மென்பொருள்

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப்
பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் உணர்ந்தால், நீக்கிவிடலாம். ஆனால், அப்படி நீக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதோ அந்த புரோகிராம்கள்.

1. ஸ்கை டிரைவ் (SkyDrive): ஸ்கை ட்ரைவினை ஏற்கனவே பயன்படுத்தி வந்திருப்பீர்கள். இவர்கள், விண்டோஸ் 8க்கான பதிப்பினைப் பதிவு செய்து, தங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு புரோகிராமாக வைத்துக் கொள்ளலாம். நம் பைல்களைப் பாதுகாப்பாகப் பதிந்து சேமித்து வைக்க நல்லதொரு இடமாக இது இயங்கி வருகிறது. பேக் அப் செயல்பாட்டிற்கு இது நிச்சயமாகத் தேவைப்படும் வசதியாக உள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்திடவும், 
மேலதிகத் தகவல்களுக்கும் செல்ல வேண்டிய இணைய தள முகவரி 

2. விண்டோஸ் 8 சீட் கீஸ் (Windows 8 Cheat Keys): விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் விதம், இயக்கப்படும் வழிமுறைகள் குறித்த, அத்தியாவசியத் தகவல்களை விரைவாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா! வேறு எங்கும் செல்ல வேண்டாம். இந்த முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான முக்கிய இயக்கத் தொகுப்பு கீ அமைப்புகளைத் தரவிறக்கம் செய்து, கற்றுக் கொள்ளவும். கீ போர்ட் ஷார்ட் கட் மட்டுமின்றி, தொடுதல் வழி இயக்க முறைகளையும் இது கற்றுத் தருகிறது. அனைத்து புரோகிராம் டைல்ஸ்களையும் மொத்தமாகக் காணும் வழி, டைல்ஸ்களை மாற்றி அமைக்கத் தேவையான வழி முறைகள், புரோகிராம்களை நீக்கும் வழிகள் என அனைத்து வகையான இயக்க முறைமை வழிகளையும் இது தருகிறது. பொதுவான பல இயக்க வழிகளுக்கான கீ தொகுப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. 

3. ஸ்கைப் (Skype): பலர் தினந்தோறும், அடிக்கடி ஸ்கைப் புரோகிராமினைத் தங்கள் தனிப்பட்ட நண்பர்களுடன், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள, ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர். நேரடியான வீடியோ, ஆடியோ மற்றும் உடனுடக்குடனான செய்தி தகவல் பரிமாற்றத்திற்கு இது மிக எளிமையான ஒரு சாதனமாக இருக்கிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இதனை விண்டோஸ் அக்கவுண்ட்டுடன் இணைத்தே செயல்படுத்த வேண்டும். மானிட்டரின் திரையில் வைத்துப் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது. இதனைத் தரவிறக்கம் செய்வதற்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இந்த முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்தினைக் காணவும். 

4. கம்பெனி ஸ்டோர் (Company Store): இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் புரோகிராம். நம் கம்ப்யூட்டருக்குள்ளாகவே அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றை உருவாக்கி நிர்வகிக்க உதவுகிறது. விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர்.டி., மற்றும் தர்ட் பார்ட்டி விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து வைத்து நிர்வகிக்கலாம். உள்ளாகவும், வெளியே பிறவற்றில் பதிந்து வைத்திருக்கக் கூடிய, கிடைக்கக் கூடிய இணைய அப்ளிகேஷன்களையும் இதற்குத் தொடர்பிருக்கும் வகையில் அமைக்கலாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த ஸ்டோருக்கு உங்கள் பெயர் அல்லது நிறுவனப் பெயரினைக் கொடுத்து அமைக்கலாம். இதனை மைக்ரோசாப்ட் அனுமதிக்கவில்லை. ஆனால், நம் பெயரினை நாமே அமைத்துக் கொள்ளும் வகையில் இந்த புரோகிராம் வசதி தருகிறது. இதனைப் பெற இந்த முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும் .

5. ட்விட்டர் (Twitter): "எனக்கு இந்த அப்ளிகேஷன் எதற்காகத் தேவைப்படுகிறது?' என்ற கேள்வியுடன் இந்த புரோகிராம் நம்மை எதிர்கொள்கிறது. இதனுடைய அழகான, தெளிவான வடிவமைப்பைப் பார்ப்பவர்கள் எவரும், என்னைப் போல, இதனை ஏற்றுக் கொண்டு பயன்படுத்த ஆசைப்படுவார்கள். விண்டோஸ் 8க்கான இந்த அப்ளிகேஷன், வழக்கமாக இல்லாமல் சற்று மாறுதல்களுடன் உள்ளது. பல ட்விட்டர் அக்கவுண்ட்களை வைத்துக் கொண்டு நிர்வகிக்க, இது எளிதில் இணக்கமாக இருக்குமா என்பது ஐயமே. ஆனால், தனி நபர் அக்கவுண்ட்களை இதில் இயக்குவது ஒரு நல்ல இனிய அனுபவமாக உள்ளது. பயன்படுத்திப் பாருங்கள்; நிச்சயமாய் விரும்புவீர்கள். இதனைப் பெற  இந்த முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். 

6. நினைவூட்டர் ஒரு டைல் (Tiles Reminder): இப்போது நிறைய நோட் டேக்கிங், காலண்டர், நினைவூட்டல் நோட் பேட் எனப் பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. டைல்ஸ் ரிமைண்டர், இந்த வகையில், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்க, வடிவமைக்கப்பட்ட புரோகிராம். இதனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொண்டால், திரையில் ஒரு டைலாக இது கிடைக்கும். இது தனிநபருக்கான குறிப்பேடாக இயங்குகிறது. இதில் எத்தகைய குறிப்பு வேண்டும் என நாமாகவே முடிவு செய்து, எதனை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் இது அமைந்துள்ளது. இதனைப் பெற  இந்த முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும். 

7. அப்ளிகேஷன் கவுண்டர் (App Counter): இது அனைவருக்கும் தேவையா? என்பது தெரியவில்லை. இதன் மூலம், விண்டோஸ் ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறித்த, அண்மைக் காலத்திய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். எவை எல்லாம் பலரால் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுகின்றன? எவை எல்லாம் அவ்வளவாக விரும்பப்படவில்லை என்ற தகவல்களைப் பெறலாம். எந்தப் பிரிவில் அதிக எண்ணிக்கையில், புரோகிராம்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிந்து கொள்ளலாம். இந்தக் குறிப்பினை எழுதுகையில், கல்விப் பிரிவும் அதனை அடுத்து, பொழுது போக்குப் பிரிவும் இருந்தன. இவற்றை அடுத்து கேம்ஸ் மற்றும் டூல்ஸ் இடம் பெற்றுள்ளன. இது பயனுள்ள அப்ளிகேஷனா என்பதனைப் பயன்படுத்துபவர் மட்டுமே முடிவு செய்திட முடியும். ஆனால், விண்டோஸ் ஸ்டோரின் செயல்பாடு குறித்த ரேங்க் கார்ட் போல இதனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம்

இதே போல இன்னும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பயன்பாட்டினைப் பெருக்கும் வகையில் கிடைக்கின்றன. மேலே காட்டப்பட்டுள்ளவை அனைவருக்கும் பொதுவான பயன்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டவை ஆகும். வாசகர்கள் மேலும் பலவற்றை இணையம் மூலம் தேடிப் பெற்றுக் கொண்டு, சரியாக இருப்பின், பயன்படுத்தலாம். அல்லது பயன்படுத்திப் பார்த்து, பின்னர் தேவை ஏற்பட்டால் வைத்துக் கொள்ளலாம். இல்லை எனில் நீக்கிவிடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget