பெண்கள் தொப்பை குறைப்பது எப்படி?

முதலில் விரிப்பில் நேராக படுக்கவும். பின்னர் இடது பக்கமாக ( ஒரு பக்கமாக)  படுத்து கொண்டு கால்கள், கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். இடது கையை தரையில் ஊற்றி உடலை மேலே தூக்கவும். இந்த நிலையில் படத்தில் உள்ளது போல் நேராக இருக்க வேண்டும். 


கைகள் உடலை ஒட்டி வைக்க வேண்டும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் வலது பக்கமும் செய்ய வேண்டும். முதலில் இந்த பயிற்சியை செய்யும் போது கடினமாக இருக்கும்.  
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை மட்டும் செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் தினமும் 30 முதல் 40 வரை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் பெண்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதியில் உள்ள அதிப்படியான சதை குறைய படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 
பெண்களுக்கு ஏற்ற நல்ல பயிற்சி இது. பெண்கள் தொப்பை குறைய ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தொப்பை குறையும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget