உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. 

சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன
நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகளை பார்க்கலாமா!!! 

* ஆரோக்கியம்: உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும். கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பினி அளவை கூட்டி, கெட்ட கொழுப்பினி அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும். 

* தசைகளுக்கு வலிமை: உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலைநிறுத்த உதவும். 

* மனநிலையை ஊக்குவிக்கும்: உணவு முறையை நம்புவதற்கு, பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலைக் கொடுப்பதால் மனநிலையை, சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும். 

* ஆற்றல்: தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும், ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவி புரியும். 

* தூக்கம்: சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல, தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. 

* எலும்புகள்: ஆரோக்கியமாக வைக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால், அது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். 

* புற்றுநோய்: உடற்பயிற்சி குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. அதனால் உடற்பயிற்சி செய்து, புற்றுநோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் 

* நீண்ட ஆயுள்: தினசரி உடற்பயிற்சி செய்வதால், ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 

* முதுகு வலியை குறைக்கும்: முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை, மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட, உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. 

* படிப்பாற்றல்: அதிகரிக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் இரசாயன அளவு அதிகரிக்கும். இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி, மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். 

அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால், படிப்புத் திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget