கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

4. சொன்னா பு‌ரியாது
சிவாவுக்கு என்று நகரங்களில் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான சொன்னா பு‌ரியாது 47.8 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் வசூலித்துள்ளது. சிவாவுக்காக கிடைத்த கலெக்சன்தான் இது. ஆனால் மிகவும் குறைவு.

3. சிங்கம் 2
பாக்ஸ் ஆஃபிஸை ஷேக் செய்த சிங்கம் 2 சென்ற வார
இறுதியில் இரண்டு புதிய படங்களின் வரவு காரணமாக 48.4 லட்சங்களையே வசூலித்தது. வார நாட்களில் வசூல் 97.8 லட்சங்கள். இதுவரை 11.8 கோடிகளை வசூலித்து இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது.

2. ம‌ரியான்
திக்கு தெ‌ரியாத ம‌ரியான் வார இறுதியில் கணிசமான ச‌ரிவை‌க் கண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் ம‌ரியானின் வசூல், 75 லட்சங்கள். வார நாட்களில் 1.44 கோடி. இதுவரை சென்னையில் 3.8 கோடிகளை வசூலித்துள்ளது.

1. பட்டத்துயானை
சந்தானத்தின் சோலோ படமே முதல் மூன்று தினங்களில் ஒரு கோடியை தாண்டி வசூலிக்கும் போது விஷாலின் பட்டத்துயானை - சந்தானம் இருந்தும் முதல் மூன்று தினங்களில் 96 லட்சங்களையே வசூலித்துள்ளது. ஒரு மாஸ் நடிக‌ரின் படம் என்ற வகையில் இது மிகக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget