ஜிமெயில் தெரிந்த பெயர் - தெரியாத தகவல்

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். 

ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா!
போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப விரும்புபவர்கள், அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர். அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. பல வாசகர்கள் இது குறித்து விளக்கங்கள் கேட்டு கடிதம் எழுதி உள்ளனர். ஜிமெயில் அஞ்சலில் படம் ஒன்றை ஒட்டி அனுப்பும் வழி முறைகளை இங்கு காணலாம். 

ஜிமெயில் தளத்தைத் திறந்து, Gmail Labs செல்லவும். (இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால், ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும். இதில் “Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் “Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அப்படியே கீழாகச் சென்று, “Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும். 

இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து, அவற்றை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். 
போட்டோ குறித்த குறிப்புகளைக் கீழாக எழுதலாம். இவ்வாறு போட்டோவினை இணைக்கையில் கூகுள் Remember: Using others’ images on the web without their permission may be bad manners, or worse, copyright infringement” என ஓர் எச்சரிக்கை தரும். ஏனென்றால், போட்டோ மற்றும் படங்களின் உரிமையாளரின் அனுமதி இன்றி, அவற்றை உங்கள் மெயிலில் பயன்படுத்துவது தவறாகும்.

நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன், ஜிமெயில் அதனை நீங்கள் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டிவிடும். இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம். அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget