கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள்

பல கர்ப்பிணி பெண்களுக்கு எந்த ஒரு சிக்கலுமின்றி கர்ப்பக் காலம் அமைந்தாலும், சிலருக்கு பல சிக்கல்களுடனே கர்ப்பக் காலம் நிலைக்கிறது. கர்ப்பிணிகள் சந்திக்கும் சில முக்கியமான ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பக்கால பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம். 

கர்ப்பக்கால சர்க்கரை நோய் என்பது கருவுற்றதனால் ஏற்படக் கூடிய ஒரு சர்க்கரை நோயாகும்.
ஏனெனில் ஏற்ற இறக்கமான ஹார்மோன் அளவினால், இன்சுலினுக்கு உடலில் உள்ள உயிரணுக்களின் ஏற்புத்தன்மையானது குறைந்துவிடும். 

ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும். இதற்கு முன் கருக்கால சர்க்கரை நோய் இல்லாத பெண்மணிகளுக்கு கூட கர்ப்ப காலத்தில் இந்த நோய் வரலாம். கட்டுப்படுத்த முடியாத கர்ப்பகால சர்க்கரை நோய் பிறக்க போகும் சிசுவையும் தாயையும் வெகுவாக பாதிக்கும். 

இது பிரசவத்தில் சிக்கல், இறந்தே பிறக்கும் சிசு, கருவில் குறைபாடு போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் இந்த நோயை கருவுற்ற மூன்று மாத காலத்திற்கு பின் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது கண்காணித்து, கர்ப்பக்கால உணவை சரியாக உண்டால், இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம். 

ஒரு பெண் கருவுற்ற பின்னர், அவளின் கருப்பை வாய் சினை சளித்திரவத்தினால் சூழ்ந்து கொள்ளும். இது கிருமி மற்றும் பாக்டீரியாக்களை கருப்பைகளுக்குள் நுழையாமல் தடுக்கும். இதனால் பிரசவம் ஆகும் வரை கருப்பை உறுதியாகவும், மூடியும் இருக்கும். 

பிரசவம் ஏற்படும் வேளையில், இந்த திரவம் விலகி ஓடி விடுவதால், குழந்தை வெளிவர சுலபமாக இருக்கும். ஆனால் தகுதியற்ற கருப்பையினால், பிரசவ தேதிக்கு முன்பாகவே கருப்பை லேசாக மாறி தளர்ந்து விடும். இந்த நிலை இறுதி மூன்று மாத காலத்தில் ஏற்படும். 

சில நேரங்களில் இரண்டாவது மூன்று மாத காலத்தில் கூட இந்த நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தான் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே பிரசவம் ஆகுதல், சவ்வுகளின் கிழிவு மற்றும் கருச்சிதைவு போன்றவற்றை ஏற்படுத்தும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்