தமிழில், "தாம் தூம் படத்தில், "ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் தான், கங்கனா ரணாவத். இந்தியில், 2006ல் வெளியான, "கேங்ஸ்டர் படத்தின் மூலம் தான், முதன் முதலில், திரையுலகிற்கு அறிமுகமானார். "சூட் அவுட் அட் வடாலா உள்ளிட்ட, ஹிட் படங்களில் நடித்துள்ள கங்கனா, தற்போது,"குயின், கிரிஷ்-3 உள்ளிட்ட, ஐந்து படங்களில், நடித்து வருகிறார்.
அவரிடம்,"உங்களுடன் அறிமுகமான நடிகைகளெல்லாம், கல்யாணம் முடித்து, வாழ்க்கையில், செட்டிலாகி விட்டார்களே? உங்களுக்கு எப்போது திருமணம் என, கேட்டால், கொலை வெறியுடன், முறைக்கிறார். "நல்லாத் தானே, போயிட்டுருக்கு? எதற்கு இந்த தடாலடி கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள்? எனக்கு, 26 வயது தான் ஆகிறது. கல்யாண விஷயத்தில், அவசரம் காட்டப் போவது இல்லை. மற்ற நடிகைகளைப் போல், கட்டுமஸ்தான, சிக்ஸ் பேக் உடல் அமைப்பு கொண்ட கணவர் தான் வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லை. சுள்ளானா இருந்தாலும், மனசுக்கு பிடித்த, ஸ்வீட் பாயா இருக்கணும். அப்படிப்பட்ட ஆள், இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால், கழுத்தை நீட்ட ரெடி என்கிறார், கங்கனா.