பழைய கணினிகளை என்ன செய்யலாம்

சிஆர்டி என்ற முறையில் அமைந்திருக்கும், பெரிய வடிவுடைய பழைய கம்ப்யூட்டர் சிலர் வீடுகளில் இன்னமும் இருக்கின்றன. பயன்படுத்துவதற்காக அல்ல. பயன்படுத்தாமல் ஏதாவதொரு இடத்தில் போட்டுவைத்திருப்பார்கள். ஆம். பெண்டியம் செயலியும் 256 எம்பி ரேமும் இருந்தால் யார்தான் பயன்படுத்துவார்கள். இளைய தலைமுறையினர் அம்மாதிரி கணினிகளை பார்த்தாலே தெறித்து ஓடுவார்கள். லோட் ஆவதற்கு 3 நாட்களும், ஓபன்
ஆவதற்கு 4 நாட்களும் எடுத்துக்கொள்ளும் அவை. அம்மாதிரி பழைய கணினிகள் உங்கள் வீட்டிலும் இருந்தால் அதை என்ன செய்யலாம்?

பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம். இதனால் ஏழை மாணவர்கள் பயனடையலாம்.

ஓரளவிற்கு வேகமாக செயல்படும் என்றால் உங்களுடைய வீட்டு சர்வராக[சாப்பாடு பரிமாறுபவர் அல்ல..] அதை திகழச் செய்யலாம். வீட்டிற்குள் லேன் இணைப்பை ஏற்படுத்தி பழைய கணினியை சர்வராக மாற்றலாம்.

சற்றே வேகமான செயல்திறன் கொண்ட கணினி என்றால், ஏதாவது புதிய இயங்குதளமோ அல்லது மென்பொருள்களையோ இன்ஸ்டால் செய்து சோதனை செய்வதற்கு பயன்படுத்தலாம்.

பழைய கணினி விளையாட்டுகளை விளையாடுவதற்கு பயன்படுத்தலாம்.

கடைசியாக நல்ல விலையோ அல்லது ஏதாவதொரு விலைகிடைத்தால் விற்றுவிடலாம்....
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget