கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் செய்யும் நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு வருடமாக படத்துக்கு தலைப்பு வைக்காத விஷ்ணுவர்தன் சமீபத்தில்தான் ஆரம்பம் என்று அறிவித்தார். அதோடு, இப்படம் ஏற்கனவே அஜீத்தைக்கொண்டு நான் இயக்கிய பில்லா படத்தை விடவும் படு வேகமான கதை. அதனால் இப்படத்தில் புதுமையான மிரட்டலான அஜீத்தை பார்க்கலாம் என்று
தெரிவித்திருந்தார்.

அதே பில்லா படத்தில் அஜீத்துடன் பிகினி உடையணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நயன்தாரா. அந்த படத்திற்கு பிறகுதான் பரபரப்பான நடிகையானார். அவர் இந்த ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தது பற்றி கூறும்போது, ‘ஏற்கனவே அஜீத்துடன் நடித்த அனுபவம் இருப்பதால் எந்த மாதிரி பார்பாமென்ஸ் பண்ணினால் அவருடன் ஒத்துப்போக முடியும் என்பதை புரிந்து அதற்கேற்ப நடித்தேன். அதனால் காதல் காட்சிகளில் எங்களுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரி இந்த படத்தில் இருக்கும்,’ என்கிறார்.

மேலும், ‘செகண்ட் இன்னிங்சில் நான் நடித்து வெளியாகப்போகிற முதல் படம் ஆரம்பம். இப்படம் பார்க்கிற ரசிகர்களுக்கு எனது நடிப்பு புதிய அனுபவமாக இருக்கும். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றி இயல்பாக நடித்திருக்கிறேன். இதுமட்டுமின்றி அடுத்தடுத்து நான் நடித்துள்ள எல்லா படங்களிலுமே நயன்தாராவாக தெரியமாட்டேன். அந்தந்த படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமாகவே நான் தெரிவேன்,’ என்கிறார் நயன்தாரா.

பழைய பதிவுகளை தேட