
குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும் 27.5.2013 முதல் மிதுன ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். குரு ஆண்டின் தொடக்கம் முதல் 30.1.2013 வரையிலும், ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், ஆண்டின் இறுதி வரையிலும் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். வக்கிர
கெடு பலன்கள் சொல்லப் பட்டிருக்கும் ராசிக் குரியவர்கள் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவரவர் ஜாதக அமைப்பின்படியுள்ள திசா-புத்திப் பலன்களைப் பொறுத்தே பலன்கள் அமையும். மேலும், திசா-புக்தி மிகவும் பலமாக அமைந்திருந்தால், கோச்சார பலன்களின் கெடு பலன்கள் அவ்வளவாக எதுவும் செய்யாது. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாகப் பின்பற்றி செய்து வந்தால், எந்த தீங்கும் அண்டாது.