சின்னத்திரை நடிகை ஸ்ருதிகா சிறப்பு பேட்டி

எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில்,  என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சேன். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே
என் அக்கா சுதாதான். டிவி ஆங்கரிங், விளம்பரத்துறை என பிசியாக இருந்த எனக்கு வெண்ணிலா கபடிக்குழு பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வேங்கையில் தனுஷ் தங்கையா நடித்தேன். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்தபோது சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜீ தமிழ் சேனலில் மாமியார் தேவை தொடரில் அழகான மருமகள் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு ஜீன்ஸ், டிசர்ட் போட்டு நடிப்பதை விட புடவைதான் பிடித்துள்ளது. அதேபோன்ற நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் அமைவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். சினிமாவில் நடித்துவிட்டு உடனே சீரியலுக்கு போனது ஏன் என்று கேட்கின்றனர். எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க வராது. குறிப்பா அயிட்டம் டான்ஸ் ஆட வராது. நான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். அதுவரை எனக்கு சீரியலில் கிடைத்து வரும் பெயர், புகழ் போதும், என்று கூறியிருக்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget