கோலிவுட்டை கலக்கும் புதிய பாணி

தமிழ் சினிமாவில் பெண்கள் நடிக்க பயந்தது ஒரு காலம். பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இரண்டடி தள்ளியே நின்று நடித்தார்கள். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் தோளை பிடித்துக் கொண்டு நிற்பார். அடுத்த கட்டமாக கைபிடித்து நடந்து வந்தார்கள். பிறகு கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். 

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் முத்தக் காட்சி தொடங்கியது. அதாவது ஹீரோவும், ஹீரோயினும் முத்தமிட்டுக் கொள்ளும்போது ஒரு பெரிய பூவை வைத்து மறைத்துக் கொள்வார்கள். அல்லது பிரேமிலிருந்து இருவரும் குனிய அதன் பிறகு ஹீரோ தன் உதட்டை துடைத்துக் கொண்டு ஸ்டைலாக எழுந்திருப்பார். நாயகி வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டு ஓடிவிடுவார்.

இதன் பரிணாம வளர்ச்சியாக கன்னத்தில் முத்தமிட தொடங்கினார்கள். பிறகு கழுத்து, நெற்றி, முதுகு, கை, கால் இப்படியாக முத்தத்தின் ஏரியா டெவலெப் ஆச்சுது. புன்னகை மன்னன் படத்தில் கமல் ரேகாவுக்கு கொடுத்த முத்தம்தான் முத்தத்தின் சரித்திரத்தை மாற்றியது.
அதற்கு முன்பு வரை ஹாலிவுட் படங்களில்தான் லிப் லாக் முத்தக் காட்சியை பார்க்க முடியும். முத்தக் காட்சிகள் நிறைந்த படம் என்ற அதற்கு விளம்பரமும் செய்வார்கள். "டேய் மாப்ள படத்துல நாலு கிஸ் இருக்குடா" என்று எண்ணி கணக்கு சொன்னார்கள். முத்தக் காட்சி வரும்போது கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதெல்லாம் புன்னகை மன்னனுக்கு முன்பு வரை. அதன் பிறகு கமல் படம் என்றாலே முத்தக் காட்சி கட்டாயம் இருக்கும் என்ற நிலை வந்தது. மகாநதி, தேவர்மகன், ஹேரேம், உள்ளிட்ட பல படங்களில் கமல் லிப் லாக் அடித்தார். என்னவோ தெரியல சமீபாகாலமாக அவர் அதை விட்டுவிட்டார்.

இப்போது வருகிற சின்ன படங்களில் லிப் லாக் முத்தக் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்று விடுகிறது. "எங்க படத்துல நாலு லிப் லாக் இருக்கு" என்று பெருமையாக பேட்டி கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் படத்தின் அக்ரிமெண்டிலேயே இத்தனை முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள். கேட்டால் கதைக்கு ரொம்ப இம்பார்ட்டன் அதான் வச்சிருக்கோம் என்பார்கள். ஹீரோயினிடம் கேட்டால் என்னோட கேரக்டருக்கு அது முக்கியம் என்பதால் ஒத்துக்கிட்டேன் என்பார்கள். இன்னும் சிலர் முத்தம் ஊர்உலகத்துல இல்லாத விஷயமா என்பார்கள். 

எப்படியோ லிப் லாக் சீன்களால் படம் ஒடி தயாரிப்பாளருக்கு பணம் வருகிறதோ இல்லையோ நடிக்கும் ஹீரோவுக்கு ஜாக்பாட்தான். அதுவும் படத்தில் நடிக்கிற ஹீரோ புரட்யூசர் மகனாக இருந்தால் டைரக்டர் நான்கைந்து டேக் வரைக்கும் எடுத்து ஹீரோவை கூல் பண்ணுவார்.

சிறிய நடிகைகள்தான் என்றில்லை, அனுஷ்கா, காஜல் அகர்வால். ஸ்ரேயா மாதிரி பெரிய நடிகைங்களும் லிப் லாக்கிற்கு ஓகே சொல்கிறார்கள். என்ன அதுக்கு தனியா கட்டணம் வாங்கிக் கொள்வார்கள். அடுத்து ஹாலிவுட் படங்களில் பளிச்சென்று வரும் பெட் ரூம் சீன்கள் இனி தமிழ் சினிமாவிலும் வரலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget