வில்லி வேடத்தில் சொல்லி அடிக்க வரும் ப்ரியாமணி

பாரதிராஜாவினால் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாமணி. அதன்பிறகு அமீரின் பருத்தி வீரன் படத்தில் நடித்த முத்தழகி வேடம் அவருக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. இருப்பினும் ஏனோ அதன்பிறகு தமிழ் சினிமா ப்ரியாமணியை கண்டுகொள்ளவில்லை. இதனால் தேசிய விருது பெற்ற ஒரு நடிகையை தமிழ் சினிமா மதிக்கத்தவறி விட்டது என்று புலம்பிக்கொண்டே கன்னட சினிமாவை முற்றுகையிட்டார் ப்ரியா.