கடல் படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!


மணிரத்னத்தின் கடல் படத்தில், இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாய கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். தங்களது மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படம் சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தில் பல காட்சிகள் கிறிஸ்தவர்களை புண்படுத்தும்படி படமாக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், அர்ஜூன் இயேசுவுக்கு தம்பி சாத்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அர்ஜூன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறுகிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ், இந்தப்பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேப்போல் படத்தின் நாயகன் இயேசு படத்தை போட்டு உடைப்பதும், அவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் இயேசுவின் ரத்தம் என்று கூறுகிறார். இப்படி பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க வேண்டும். கிறிஸ்தவர்களை புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget