ஷாலினிக்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவர் அவரது தங்கை ஷாம்லி. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த அஞ்சலி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் அவருக்கு தேசிய விருதினையும்
பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகும் துர்கா உள்ளிட்ட பல படங்கள் அவரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் கதாநாயகியாக நடிக்க என்ட்ரியானபோது, ஓரிரு படத்தோடு படிப்பை தொடர சென்று விட்ட ஷாம்லி, தனுஷ் நடித்துள்ள ‛கொடி' படத்தில் முதலில் கமிட்டாகியிருந்தார். ஆனால், பின்னர் அந்த படத்தில் திரிஷாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியேறி விக்ரம் பிரபுவின் ‛வீரசிவாஜி' படத்தில் ஒப்பந்தமானார்.