விஷால் திருமணம் பரபரக்கும் கோலிவுட்

நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறும் முதல் திருமணம், என் திருமணம் தான் என, நடிகர் விஷால் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்க தேர்தலில், சரத்குமாரை
எதிர்த்து வெற்றி பெற்ற விஷால், ஆடு பகை; குட்டி உறவு என்பது போல், சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் எடுத்த, செல்பி புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். சினிமா மற்றும் பொது நிகழ்ச்சியிலும், இருவரும் சேர்ந்தே பங்கேற்றனர். இருவரும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும், சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.