கோடம்பாக்கம் புது வரவு சயாமி கவுர்

'ரேய்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சயாமி கவுர். பிரபல நடிகை சபனா ஆஸ்மியின் அண்ணன் மகள். அதன்பிறகு 'மிர்ஷியா' என்ற இந்திப் படத்தில் நடித்தார். இயக்குனர் மணிரத்தனம் தற்போது 'காற்று
வெளியிடை' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக அதாவது 'ஓகே கண்மணி' முடிந்த பிறகு தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்குவதாக இருந்தார் மணிரத்னம். அதில் மம்முட்டி மகன் துல்கர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார் சயாமி கவுர். ஆனால் தற்போது அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு 'காற்று வெளியிடை' இயக்குகிறார் மணிரத்னம்.

பழைய பதிவுகளை தேட