சின்னத்திரையை கலக்க வரும் காயத்ரி பிரியா

காயத்ரி பிரியாவை நினைவிருக்கிறதா? ஆடுகிறான் கண்ணன், தீர்க்க சுமங்கலி என தமிழ் தொடர்களில் கலக்கியவர். புகழின் உச்சியில்
இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். கணவர் தனியார் வங்கி ஒன்றின் மலேசிய கிளையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.தற்போது காயத்ரி பிரியாவின் கணவருக்கு சென்னை மாறுதல் கிடைத்து சென்னைக்கு வந்து விட்டது குடும்பம். இதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில் மலையாள தொடர் ஒன்றிலும், தமிழ் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

"எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால் கடந்த 4 ஆண்டுகள் குடும்பத்துக்காக ஒதுக்கி விட்டேன். பரபரவென நடித்து விட்டு மலேசியாவில் வீட்டுக்குள்ளேயே இருந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் குழந்தைகள் வந்த பிறகு அது மறைந்து விட்டது. தற்போது சென்னைக்கு வந்து விட்டோம். மீண்டும் நடிக்க கணவரும் அனுமதி தந்து விட்டார். கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன்" என்கிறார் காயத்ரி பிரியா.

பழைய பதிவுகளை தேட