திருமணமா எனக்கா கீர்த்தி சாவ்லா

அர்ஜூன் நடித்த ஆணை படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் மும்பை நடிகை கீர்த்தி சாவ்லா. அதன்பிறகு அஜித் நடித்த ஆழ்வார் மற்றும் நான் அவனில்லை, உளியின் ஓசை, திருமதி தமிழ் என பல படங்களில் நடித்த அவருக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக படங்கள் இல்லை. 
அதனால் சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து மும்பை சென்று விட்டார். அப்போது அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாக கோடம்பாக்கத்தில பேசிக்கொண்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்
கோடம்பாக்கத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவரிடத்தில், திருமணம் குறித்து கேட்டபோது, எனக்கு இப்போது வயது 34 ஆகிறது. என்றாலும் சத்யமாக எனக்கு திருமணம் நடக்கவில்லை. நடிப்பில் ஆர்வம் இருப்பதால் திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. மேலும், திருமண வயதான ஒரு நடிகை திடீரென்று காணாமல் போனால் யாருக்கும் இந்த மாதிரி சந்தேகம் வரத்தான் செய்யும். அப்படித்தான் என்னைப்பற்றியும் இப்படியொரு திருமண வதந்தி பரவியிருக்கிறது.

மேலும், இப்போது நான் முன்னணி ஹீரோ, வளர்ந்து வரும் ஹீரோ என்கிற பாகுபாடு பார்க்காமல் நல்ல வேடமாக கிடைத்தால் எந்த நடிகருடனும் நடிக்க தயாராக இருக்கிறேன். சிலர் நெகடீவ் வேடத்தில் நடிக்கச்சொல்கிறார்கள். எனக்கு அது செட்டாகாது என்பதால் நான் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து பாசிட்டீவான கதாநாயகி வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறேன் என்கிறார் கீர்த்தி சாவ்லா.

பழைய பதிவுகளை தேட