பளிச்சென மின்ன பலே ஐடியா

பொதுவாகவே பெண்களுக்கு மிக வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை, இதற்காக பல்வேறு கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால் பிற்காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகும் நிலை ஏற்படலாம். இவ்வாறு இல்லாமல் மிக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அழகாக ஜொலிக்கலாம்.

சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ
வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு பேஷியல் செய்ய வேண்டும். வாழைப்பழ பேஷியல் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஆப்பிள் பேஷியல் சிறந்ததாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை வைத்து, பேஷியல் செய்தால், வறட்சியில்லாத சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget