சருமத்தை அழகாக்கு சட்டென வழிகள்

பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். பெண்கள் அழகாக இருப்பதில் சருமத்தின் பங்கு தான் அதிகம். சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்திற்கு வெகு அருகில் வருகின்றன. 

அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கறுக்கிறது. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின்
குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரண்டாவது  எண்ணை வழியும் சருமம். எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து சருமத்தைக் காப்பாற்றலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget