குத்துச்சண்டையில் கும்மா குத்தும் ரித்திகா

சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் நடித்தவர் ரித்திகா சிங். ரியல் குத்துச்சண்டை வீராங்கனையான அவர், அந்த குத்துச்சண்டை
கதையில் மிக இயல்பாக நடித்து சிறந்த புதுமுக நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். அதையடுத்து விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்த அவர், தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வரும் சிவலிங்கா படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். என்னதான் இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரித்திகா ஆசைப்பட்டபோதும், அவருக்கு தமிழில் மட்டுமே தொடர்ந்து படங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், முதல் படத்தில் ஸ்லிம்மாக இருந்த ரித்திகா சிங், தென்னிந்திய ரசிகர்களுக்கு கதாநாயகி ஓரளவு குண்டாக இருந்தால்தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு ஆண்டவன் கட்டளை படத்தில் பூசினாற் போன்று வெயிட் போட்டிருந்தார். தொடர்ந்து அதே உடல்கட்டை பராமரித்து வரும் ரித்திகா, சில நடிகைகள் படிப்பை தொடர்ந்தபடியே சினிமாவில் நடித்து வருவது போன்று குத்துச்சண்டை போட்டிகளில் அவ்வப்போது கலந்து கொண்டபடியே நடித்து வருகிறாராம். அதோடு, குத்து சண்டைதான் என் லைப். அதற்காக நான் நிறைய உழைத்திருக்கிறேன். அதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ப தற்காக எக்காரணம் கொண்டும் குத்துச்சண்டையை விட மாட்டேன் என்கிறார் ரித்திகா சிங்.

பழைய பதிவுகளை தேட