அழகை அதிகமாக்கும் நயன்தாரா

அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணியில் நடித்தவர் நயன்தாரா. அந்த படத்தின் முதல்நாள் முதல் ஷாட்டே நயன்தாராவை வைத்துதான்
படமாக்கினார் அட்லி. அதில், கமல்ஹாசன் கலந்து கொண்டு கிளாப் அடித்து அந்த படத்தை தொடங்கி வைத்தார். அப்படி உருவான ராஜா ராணி படம் அட்லிக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. அதே படத்தில் ஆர்யா, ஜெய், நஸ்ரியா என பலர் நடித்தனர். ஆனால் நயன்தாராவை தனது செண்டிமென்ட் நாயகியாக நினைக் கும் அட்லி, அதன்பிறகு விஜய்யை வைத்து தான் இயக்கிய தெறி படத்தில் சமந்தாவை நடிக்க வைத்தார்.

ஆனால், தற்போது விஜய்யை வைத்து இயக்கும் மூன்றாவது படத்தில் மீண்டும் நயன்தாராவை நாயகியாக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை மிக மிக இளமையாக காண்பிக்கிறாராம் அட்லி. அதோடு, அப்படி அவரை இளமையாக காண்பிப்பதற்காக வித்தியாசமான லொகேசன்களில் நவீன காஸ்டியூம்களில் அவரது காட்சிகளை படமாக்கப்போகிறாராம். அதனால், டிசம்பரில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக தனது அழகை மேலும் மெருகேற்றிக்கொண்டு களமிறங்குகிறாராம் நயன்தாரா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget