விஜய் டிவியை கலக்கும் வைசாலி

ஜெயா டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. அதையடுத்து புதுயுகம் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர்,
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையானார். பின்னர், கலையரசன் நாயகனாக நடித்து வெளியான ராஜா மந்திரி படத்தில் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வைசாலி தயாராக இருந்தபோதும் அவர் எதிர்பார்த்தது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முதலில் காயத்ரி தொகுத்தளித்து வந்த நிலையில், தற்போது வைசாலி இடம்பெற்று வருகிறார். அடுத்தபடியாக சின்னத்திரையில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என்று தொடர்ந்து பங்களிக்கப்போவதாக சொல்கிறார் வைசாலி.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget