அனுஷ்காவிற்கு திருமணமா

30 வயதைக் கடந்த போதும் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நாயகியாக விளங்கும் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக
கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களான நாகார்ஜூனா, பிரபாஸ் போன்றவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய அனுஷ்கா, திருமணமான இயக்குனர் ஒருவருடன் காதலில் விழுந்ததாக அண்மையில் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மற்றொருபுறம் அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் அவரது குடும்பத்தார், தொழிலதிபர் மாப்பிள்ளையாக விசாரித்து வருகின்றனராம். இதில் ஐதரபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழில் சூர்யாவுடன் எஸ் 3 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, பாகுபலி-2, ஓம் நமோ வெங்கடேஷாய போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.

பழைய பதிவுகளை தேட