தேவி சினிமா விமர்சனம்

பிரபுதேவா ஸ்டுடியோஸ் பேனரில் டாக்டர் ஐசரி கே.கணேஷூம், பிரபுதேவாவும் இணைந்து தயாரித்து தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபுதேவா , தமன்னா ஜோடி நடித்து ஒரே நேரத்தில் வெளிவந்திருக்கும் ஆவியும் அமானுஷ்ய சக்தியும் நிரம்பிய படம் தான் தேவி.

மும்பையில் வேலை வெட்டி என அலையும் கிருஷ்ணா - பிரபு தேவா., பாட்டிக்கு முடியலைன்னு ஊருக்கு வந்த போது சாகக் கிடக்கும் பாட்டியின் விருப்பம் என அவர் தலையில் பால்காரி தேவி - தமன்னாவை கட்டி வைத்து
விடுகின்றது ஊரும் உறவும் . மனைவி பற்றி ஏகப்பட்ட கனவுகளுடன் இருக்கும் கிருஷ்ணா - பிரபு தேவா, வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் அந்த அறுக் காணி தேவி - தமன்னாவிடம் பத்தடி தள்ளி நடக்க வேண்டும்... எனும் கண்டீஷனுடன் பாம்பே போய் இறங்குகிறார். அங்கு மும்பையில் ஒரு பாடாவதி வீட்டை பதினைந்தாயிரம் வாடகைக்கு பிடித்து குடியேறுகின்றனர் இருவரும். பல வருடங்களாக பூட்டப்பட்டு கிடக்கும் அந்த வீட்டில் இவர்களுக்கு முன், சினிமாவில் புகழ் பெற வேண்டும் எனும் லட்சியத்துடன் குடியிருந்த ரூபி எனும் இளம் பெண், தன் லட்சியம் நிறைவேறப் போகும் தருணத்தில் ஒவர் டிப்ரஷனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார். அவரது ஆவி ., தமன்னாவின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு அவரையும் , பிரபுதேவாவை யும் ஆட்டிப் படைத்து தன் லட்சிய பாதைக்கு அழைத்து போகிறது. ஒரு சில கண்டீஷன்களுடன் அதன் ஒரு பட நடிப்பு லட்சியம் நிறைவேற தன் மனைவியின் உடம்பைக் கொடுக்க சம்மதிக்கும் பிரபு தேவா, அதன் பின் தன் மனைவியை திரும்ப மனைவியாகவே அடைந்தாரா ? அல்லது நடிகையாக்க துணிந்ததால் துறந்தாரா..? என்பது தான் "தேவி" படத்தின் திகிலும் திருப்பங்களும் நிரம்பிய கரு , கதை , களம் எல்லாம்.

பெருந்தன்மை நடிப்புக்கு சொந்தக்காரரான பிரபுதேவா ., அதிகம் ஆடாமல் , தமன்னா ,சோனு சூட் இருவரையும் ஆடவிட்டு வேடிக்கை பார்த்திருக்கும் பி.தேவாவின் பெருந்தன்மையே பெருந்தன்மை . மேலும் ,"என்னத் தவிர எல்லோருக்கும் என் பொண்டாட்டிய புடிச்சிருக்கு .. என புலம்பும் பிரபு தேவா ஹாசம். உலகத்திலேயே முதல்முறையா ஒரு புருஷன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லப் போறான" நீ அம்மா ஆகப்போற ...." எனும் டயலாக்குகளிலும் ., அண்டர் கவர் காப்பா நீ என மனைவியைப் பார்த்துகேட்டு அலறடிப்பதிலும் ... ஜொலிக்கிறார் இந்தநடனப் புயல்.

தமன்னா ., தேவியாகவும் , ரூபியாகவும் பெருந்தன்மை பிரபுதேவாவையும் தாண்டி பிய்த்து பெட லெடுத் திருக்கிறார். அதிலும் "அடங்கொக்கமக்கா, மாக்கா... ." பாடலில் தமன்னா மைக்கேல் ஜாக்ஸியாக மாறி ஆடும் ஆட்டம் பிரபு தேவாவையும் பீட் செய்து விடுகிறது . தமன்னா ஹேட்ஸ் ஆப் டூ யூ .

"ஒரு பொண்ணுக்கு அழகு இருந்தா ஆணை ஆளலாம் , அறிவு இருந்தா நாட்டை ஆளலாம், அழகு அறிவு இரண்டும் இருந்தா உலகத்தையே ஆளலாம் ... " எனும் தமன்னாவின் நடிப்பிலும் அம்மணி தமன்னா ., செம ஸ்மார்ட் ... போதையில் புடவை களைந்து கிடப்பது பார்த்து நீ என்ன தொட்டியா ... பத்து முறை காயத்ரி மந்திரம் சொல்லனும்னு புருஷன் பிரபு தேவாவிடம் பதறுவது ஹாசம் , வாசம் . வாவ்.

சோனு சூட் , பாத்திரத்தின் வாயிலாக நடிகைகளுக்கு இரவில் தொலைபேசியில் தொல்லை தரும் நம்மூர் நாயகர்களின் நிஜ முகத்தை கிழித்திருக்கிறார் இயக்குனர் விஜய். சோனு சூட்டும் இயக்குனரின் எண்ணத்தை உணர்ந்து தன் பாத்திரத்திற்கு பக்காவாக வலு சேர்த்திருக்கிறார் பலே , பலே!

"தெரியாம பண்ணியா தெரியலை ... ஆனா இந்த ஒரு விஷயம் தான் நீ செய்ததுலேயே நல்ல காரியம் ..." ,எனும் பிரபு தேவாவிடம் "சாரிடா ... தெரியாம பண்ணிட்டேன் எனப் புலம்பும்... " பாலாஜி ஆர்.ஜே. அசத்தல். நாயகியின் குடிகார அப்பா ஆர் வி.உதயகுமார், மார்டன் மந்திரவாதியாக நாசர், அவரது அலட்டல் உதவியாளராக காமெடி சதீஷ், மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு மிளிரும் மிரட்சி , "பேசாமல் கேட்டேன் ... ", "பத்து மணி வாக்குல ...." உள்ளிட்ட பாடல்களில் சாஜித் -வாஜித் , & விஷால் மிஸ்ரா ஆகியோரது இசை நச் - டச் , கோபிசுந்தரின் பேக்ரவுண்ட் மியூசிக்கும் மிரட்டல் ., பால் ஆரோன் & விஜய்யின் கதை பேய் படக் கதையிலும் லாஜிக்காய் இருப்பது ஆறுதல் , ஆண்டனியின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு .

குடிக்க மாட்டேன், ரேப் சீன் நடிக்க மாட்டேன் ... என பிரபுதேவா நார்மலாய் இல்லாது நடிக்கப போகும் தமன்னாவிடம் அக்ரிமெண்ட் போடும் இடத்தில் ., தமன்னா , பிரபுதேவாவிடம் ., என்ன பைத்தியமா? உனக்கு ஒரு ஹீரோயின் இதெல்லாம் பண்ணாது எப்படி ? எனும் டயலாக் போர்ஷனில் இயக்குனர் விஜய்யின் அனுபவம் கொப்பளிக்கிறது .

விஜய்யின் எழுத்து, இயக்கத்தில் "நான் முன்னாடி போறேன் நீ பத்தடி பின்னாடி வா ... ஏன் ? பாம்பேல அப்படித்தான் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் ஒண்ணா போக மாட்டாங்க ...." , எனும் யதார்த்த காமெடி வசன" பன்ச் "கள் , " நான் உன்கிட்டே பர்மிஷனா கேட்டேன் ?இன்பர்மேஷன் கொடுத்தேன் ... , எனும் தமன்னா .,டாப் டூ பாட்டம் கவர் பண்ணி இருக்கணும்னு சொன்னேன்ல ... இது என்ன ? சின்ன புள்ளைங்க குழந்தைங்க யாரும் நடிக்கிறாங்களா ? இது என்ன இவ்வளவு சின்ன டிரஸ்?என அப்பாவி யாய் கேட்டு ., டாப்பும். பாட்டமும் இல்ல ... என பிரபுதேவா பதறும் இடம் . , நான் ,தேவி ய வீட்டுல டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ..." எனும் பேயின் உறுதி மொழி ., "நீங்க தமிழா ?அப்போ அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான் மேடம் ராஜ் சார் கூப்பிட்டு வரச் சொன்னார்...." எனும் சினிமா வழியல் ... " , தேவியின் உடம்பில் ரூபி பேய் புகும் மற்றும் வெளியேறும் இடங்கள் .., மும்பை 205 ம் நம்பர் வீட்டு பில் -டப் ..... உள்ளிட்ட ஹாஸ்யங்கள் ., கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட் உதவியால் மிளிரும் பேயின்தகிடுதத்தங்கள் உள்ளிட்ட ஹாஸ்யங்கள் சுவாரஸ்யங்களுக்காக "தேவி" யைத் திரும்ப , திரும்ப பார்க்கலாம். ரசிக்கலாம்!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget