தன் நெருங்கிய நண்பர் ஆர்டி ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான நாயகி கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயன், பெண் வேடமெல்லாம் போட்டு நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "ரெமோ".
சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் காமெடி சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன்... உள்ளிட்ட ஒரு பெரும்
நட்சத்திர பட்டாளமும் பங்கு பெற புதியவர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில், இரண்டரைமணி நேர லவ் - காமெடி படமாக வெளிவந்திருக்கும் "ரெமோ" படத்தின் கதைப்படி, பெண் என்றாலே சற்று பயந்து ஒதுங்கும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், அவருக்கு நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில், கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு நாயகர் தேர்வு நடைபெறுவதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடித்துக் காட்டச் சொல்கிறார் ரவிக்குமார்.
ஆனால், சிவாவுக்கோ, லவ்வும், ரொமான்ஸும் நடிப்புக்குக் கூட வரவில்லை. அதனால், கே.எஸ்.ரவிக்குமார்., சிவகார்த்திகேயனை துரத்துகிறார். ஆனாலும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை கண்டு, தான் அடுத்ததாக எடுக்கும் படத்தை பற்றி அவரிடம் சொல்லி, அந்தபடத்தில் ஹீரோவுக்கு லேடி - நர்ஸ் கெட்டப் என்றும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு
வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் களத்தில் குதிக்கிறார். சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி - நர்ஸ் கெட்டப் போட்டு சென்று அவரிடம் நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பில் திருப்தியில்லை. இதனால், சோகத்துடன் லேடி கெட்டப்பில் பேருந்தில் வீடு திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு, பெண் என நினைத்து காதல் சில்மிஷம் செய்கிறார். இதைப் பார்க்கும் சிவாவின்., மாஜி ஒருதலைக் காதலி கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று கருதி., யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறார்.
மேலும், அவரை, பெண் நர்ஸ் என நினைத்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இதை கீர்த்தியுடன் இணைய தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவர் மனதை மாற்றி கீர்த்திக்கு நிட்சயிக்கப்பட்ட திருமணத்தை தடுத்து நிறுத்தி, தன் காதலியை கைப்பிடிக்க நினைக்கிறார். காதல் விஷயத்திலாவது சிவகார்த்திகேயனின் எண்ணம் ஈடேறியதா? சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது "ரெமோ" படத்தின் மீதிக்கதையும் , களமும்!
சிவகார்த்திகேயன், நாயகராகவும், லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக அவரது சில்மிஷங்களும், சேட்டை கரும் நன்றாகவே இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க லேடி கெட்டப் என்றாலும் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு, அவர் காட்டும் ஸ்டைலும் காட்டும் லுக்கும் செம கிக்.
அதிலும், கீர்த்தி சுரேஷ் திடீரென பெயர் கேட்டதும் "ரெமோ" எனும் பெயரைக் கூறி பேனரில் ஹன்சிகா மோத்வானி புகைப்படத்தைப் பார்த்து விட்டு, அவர் மாதிரி என் பெயர், ரெஜினா மோத்வானி... சுருக்கமாக ரெமோ என சமாளிக்கும் இடத்தில் பெண் வேட சிவா., நச் - டச் என்றால், யாரும், லவ் பண்ணக் கூடாதுன்னா, "சினிமா படத்தில் எல்லாம் சிகரெட், லிக்கர் ஈஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த் என்று கார்டு போடுகிறார்களே... அது மாதிரி அதே படங்களின் லவ் சீன் வரும் போதெல்லாம் லவ் ஈஸ் இன்ஜூரியஸ் டூ லைப்புன்னு எழுத்து போட சொல்லுங்க..." என்று அலும்பு பண்ணும் ஆண் நாயகர் பாத்திரம் வரை சிவா சிறப்பாக செய்திருக்கிறார்.
நர்ஸ் கெட்டப்பில் நாடகமாடி கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர சிவா செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் ஹாஸ்யம் என்பது படத்தின் பெரும் பலம். சிவகார்த்தியின் லேடி கெட்அப்பும் அந்த கெட்அப்புடன், இயக்குனர் ரவிக்குமாரிடம் அவர், "அழகான பொண்ணுதான்..." பாடலுக்கு குலுக்கி குலுக்கி ஆடும் இடம், உள்ளிட்ட சேஷ்டைகள் படத்திற்கு பலம்.
இளம் பெண் டாக்டராக கதாநாயகி - கீர்த்தி சுரேஷ், அசால்ட்டாக, அம்சமாக நடித்திருக்கிறார். அம்மணி இதற்கு முந்தைய படங்களைக் காட்டிலும் அழகாக இருக்கிறார், அசத்தலாக நடித்தும் இருக்கிறார். வெல்டன் கீர்த்தி. நிச்சயித்தவனை கைவிடவும் முடியாமல், ஆசைப்பட்டவனை அடையவும் முடியாமல் தவிக்கும் கீர்த்தி சுரேஷின் யதார்த்த நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
சதீஷின் டைமிங் காமெடி படத்திற்கு பெரியளவில் கைகொடுக்க முற்பட்டிருக்கிறது. நான்கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோரின் சேஷ்டைகளும் களேபரம்.. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல், மகனின் காதலியை பார்த்தவுடன் அவர் தான் தன் மருமகள் என அடம் பிடிக்கும் நாயகரின் வெள்ளந்தி அம்மாவாக சற்று இடைவெளிக்குப் பின் ஈர்ப்பாய் நடித்திருக்கிறார்.
கீர்த்திசுரேஷின்அப்பாவாக வரும் "ஆடுகளம்" நரேன், சீப் டாக்டர் பிரதாப் போத்தன், சினிமா டைரக்டராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமார், கதாநாயகியின் அம்மாவாக வரும் கல்யாணி நடராஜன், நாயகியின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விஷ்வாவாக வரும் ஆன்சன், பேபி ரக்சா உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் கனமறிந்து கலக்கலாக நடித்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் "போற போக்குல ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே...", "வாடியேன் தமிழ்செல்வி....", "காவியா ஓவியா..." உள்ளிட்ட பாடல்கள் ரம்மியம், ரசனை. ஹம்மிங் செய்யத் தூண்டும் ரக, ராகம் என சொல்லத்தான் ஆசை.
கின்னஸ் சாதனையாளர் ரெசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக தனது ஒலி வடிவமைப்பில் மாற்றியிருக்கிறார். சி.ஜி உதவியுடன் டி.முத்துராஜின் லவ் எபிசோட் செட்டுகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் மிளிர்ந்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒவியப்பதிவு ,ஒளிப்பதிவு படத்திற்கு, வலு சேர்த்து இருக்கிறது.
வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்த்து நாயகருக்கு காதல் வருவது, அவரை கவிழ்க்க பெண் வேடம் போடுவது... என மிகவும் பழைய பாணியில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், ஒவ்வொரு காட்சியையும் காட்சிப்படுத்தியிருந்தாலும்., அவை ரசிகனை படுத்தவிடாமல் பார்த்துக் கொள்கிறது பி.சி.ஸ்ரீராமின், அழகான கேமிரா என்பது ஆறுதல்.
"இங்க லவ்வுன்னா உயிரை எடுக்கிற பசங்களும் இருக்காங்க... உயிரை கொடுத்து லவ் பண்ற பசங்களும் இருக்கங்க... " என்பது உள்ளிட்ட வசனங்களையும், சிவகார்த்தியின் லேடி கெட்-அப்பையும் நம்பி இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை சற்றே காமெடியாக "அவ்வை சண்முகி" டைப்பில் படமாக்க முயற்சித்திருக்கிறார்... என்பது குறை. மற்றபடி, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த நாயகர் காதலுக்காகவும், காதலிக்காகவும் அவ்வளவு செலவு செய்வது உள்ளிட்ட லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்., 'ரெமோ' வுக்கு, அழகான பெண்கள் எல்லாம்., குறிப்பாக சில நடிகைகள்... தங்களுக்கு சிவகார்த்தி., போட்டியாக வந்து விட்டார்... என அவருக்கு., கொடுக்கலாம் மெமோ.