பாலக் பன்னீர்

ண்களுக்கு குளுமையான பச்சைப் பசேல் நிறம், மென்மையான தன்மை மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்தது பாலக்கீரை. எலும்புகளுக்கு போஷாக்கு அளித்து வலுவூட்டும் கால்சியம் நிறைந்து நோய் தீர்க்கும் சக்தியும் இதில் உள்ளது.
தற்போதைய இயந்திர வாழ்வில் மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பாலக்கீரை. பாலக்கீரைகளை ஆய்ந்தாலே போதுமானது. பொடியாக நறுக்க வேண்டிய தேவை இல்லை. ஆய்ந்த கீரையை தண்ணீரில் குறைந்த நேரம் (ஒரு கட்டுக்கு 4 அல்லது 5 நிமிடங்கள்) கொதிக்கவிட்டாலே போதும். மிகக்குறைந்த நேரம் கொதிக்கவிடுவதால் பாலக்கீரையில் உள்ள சத்துக்களும் வீணாவதில்லை.
மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய பாலக்கீரையில் பன்னீர் சேர்த்து மேலும் சுவையையும் சத்தையும் கூட்டி பாலக் பன்னீர் இம்முறை செய்வோமா?
 

தேவையான பொருட்கள்

பாலக்கீரை – 1 கட்டு
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய பன்னீரைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
* பிறகு அதே வாணலியில் பொடியாக அரிந்த, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு
விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடிகனமான ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஆய்ந்த பாலக்கீரைகளைப் போட்டு 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு ஆறியவுடன் மிக்சியில் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
* இதனுடன் நன்கு வதங்கிய வெங்காயம்- தக்காளிக் கலவையை ஆறியவுடன் மிக்சியில் போட்டு மேலும் ஒரு சுற்று அரைக்கவும்.
* இப்போது கனமான பாத்திரத்தில் மிக்சியில் அரைத்த கலவை, பொன்னிறமாக வறுத்து உள்ள பன்னீர், சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும்.
* சூடாக இறக்கி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு

பன்னீர் துண்டுகளை எண்ணையில் வறுக்காமல் அப்படியே பாலக் பன்னீர் செய்ய உபயோகித்தாலும் சுவையாகவே இருக்கும்


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget