அஸ்பாரகஸ்

Asparagus officinalis
Wild Asparagus in Austria
Wild Asparagus in Austria
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத):Angiosperms
(தரப்படுத்தப்படாத)Monocots
வரிசை:Asparagales
குடும்பம்:Asparagaceae
பேரினம்:Asparagus
இனம்:A. officinalis
இருசொற்பெயர்
Asparagus officinalis
அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் என்பது அஸ்பாரகஸ் பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்துஅஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது. இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டத்தாகும். இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது. 
 உயிரியல்
அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 centimetres (39–59 in) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது. செதிள் இலைகளின் இலைக்கக்கத்தில் கள்ளியின் (உருமாறிய தண்டுகள்) முட்களைப் போன்று அதனுடைய "இலைகள்" அமைந்திருக்கும்; அந்த இலைகள் மிகவும் 6–32 millimetres (0.24–1.3 in) நீளமாகவும் 1 millimetre (0.039 in) அகலமாகவும் 4 முதல் 15 இலைகள் வரை கொத்து கொத்தாக இருக்கும்.இதனுடைய வேர்கள் தண்டங்கிழங்கு போன்றவை.இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.4.5–6.5 millimetres (0.18–0.26 in) இவை நீண்டு, 6 பூவுறையிதழ்களுடன் அடியில் சிறிதளவு இணைக்கப்பட்டிருக்கிறது; இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.

இந்த தாவரம், ஐரோப்பாவின் மேற்கத்திய கடற்கரைகளில் (வடக்கு ஸ்பெயின் வடக்கிலிருந்து அயர்லாந்து, பிரிட்டன், மற்றும் வடமேற்கு ஜெர்மனி) வரை வளர்கிறது. இது அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸாகவும் ,நிலத்துக்கடியில் வளரும் (ப்ரொஸ்ட்ராட்டஸ்) தாவரத்தின் துணைவகையாகவும் (டுமார்ட்) கருதப்படுகிறது. இந்த தாவரம், அதனுடைய தாழ்-வளர்ச்சி மூலமாக வேறுபடுத்தப்படுகிறது. நிலத்துக்கடியில் உள்ள தண்டு 30–70 centimetres (12–28 in) உயரம் வரை மட்டுமே வளரும். குட்டையான கள்ளிகள் 2–18 millimetres (0.079–0.71 in) நீளம் வரை வளரும். இது ஒரு வேறுப்பட்ட அஸ்பாரகஸ் நிலத்தடித் தாவர டூமார்ட் இனமாக, சில நூலாசிரியர்களால் கருதப்படுகிறது.
 வரலாறு

ஆரம்ப காலங்களில் அஸ்பாரகஸ், ஒரு காய்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய மென்மையான சுவைமணத்திற்காகவும் சிறுநீர்ப்பெருக்கி பண்பிற்காகவும் இந்த தாவரத்தை பயன்படுத்தினர். பழைய காலத்து உணவு செய்முறை புத்தகத்தில் அஸ்பாரகஸ்ஸை சமைப்பதற்கான சமையல் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயர் அபிஸியஸின் மூன்றாவது நூற்றாண்டு ஏ.டி De re coquinaria, புத்தகம் III ஆகும். இந்த தாவரம், பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது. இந்த தாவரத்தின் பருவக்காலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டு குளிர்காலத்திற்காகவும் எடுத்துவைக்கப்பட்டது. இடைக்காலத்தின் போது இந்த தாவரம் பிரபலமாக இல்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது.

பயன்கள்

சமையல் பயன்பாட்டில்


அஸ்பாரகஸின் மூன்று வகைகளும் ஒரு கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை அஸ்பாரகஸ் கடைசியில் உள்ளது. பச்சை அஸ்பாரகஸ் நடுவில் உள்ளது.முதலில் வைக்கப்பட்டிருக்கும் தாவரம் ஆர்னிதோகாலம் பைரினாய்க்கம் ஆகும். இந்த வகை அஸ்பாரகஸ், பொதுவாக காட்டு அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படுகிறது. சிலநேரங்களில் "பாத் அஸ்பாரகஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
அஸ்பாரகஸின் இளம் தளிர்கள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது.


அஸ்பாரகஸ், குறைவான கலோரியை உடையதாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அஸ்பாரகஸில், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார் சத்து உணவு வகை மற்றும் ரூட்டன் ஆகியவை உள்ளது. அஸ்பாரகஸிலிருந்து அமினோ அமில அஸ்பாரஜின் என்று பெயரைப் பெற்றது. இது போன்ற சேர்மங்கள் அஸ்பாரகஸ் தாவரத்தில் மிகவும் அதிகமாக உள்ளன.


வேகவைத்த அஸ்பாரகஸ் வருத்த பைன் கொட்டைகளுடன் சேர்த்து தயாரிக்கப்படும்.
இந்த தாவரத்தின் தளிர்கள் பல வகைகளாக சமைக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அஸ்பாரகஸ், ஆசியர்களின் சமையல் பாணியில், பொறியல் வகையைப் போல பொரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கேண்டனீஸ் (சீனாவின் பேசப்படும் ஒரு வகை பாஷை) உணவகங்களில், அஸ்பாரகஸ் வறுத்த பொரியலாக கோழி இறைச்சி, இறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். இந்த அஸ்பாரகஸ் பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும். அஸ்பாரகஸ்சை, அடுப்புக்கரி அல்லது வன்மர தணல்களிலும், சுடப்படும் முறையில் சீக்கிரமாகவே சமைத்திடலாம். ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு பாணியில், இது கொதிக்கவைத்து அல்லது வேகவைக்கப்பட்டு, ஹாலண்டைஸ் (முட்டை, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை கலந்தது) சுவைச்சாறு, உருகிய வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், பார்மிசன் பால்கட்டி அல்லது மேயனைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும். உணவுக்குப் பின் கொடுக்கப்படும் இனிப்பு வகையிலும் இது பயன்படுத்தப்படலாம்.ஆரம்பநிலையில் வளரும் (பருவத்தின் போது வளரும் முதல் விளைச்சல்) அஸ்பாரகஸ் தான் மிகவும் சிறந்ததாக இருக்கும். இது அதிகமான நேரங்களில், வேகவைக்கப்பட்டும் உருகிய வெண்ணெயுடனும் சேர்த்து உணவாக வழங்கப்படும். உயரமான மற்றும் குறுகிய அஸ்பாரகஸ் சமையல் பானைகளில், தளிர்கள் மென்மையாக வேகவைக்கப்படும். அதனுடைய முனைகள் தண்ணீருக்கு வெளியே இருக்கும் படி வேகவைக்கப்படும்.


அஸ்பாரகஸ் ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது. இது பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப்படுகிறது. சில தயாரிப்பு வகைகளில், தளிர்கள் "மாரினேட்டட்" (உப்பு தடவப்பட்ட நிலை) முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விவரச்சீட்டில் குறிப்பிடலாம்.


அஸ்பாரகஸின் அடிப்பகுதியில் மண்ணும் அழுக்கும் இருக்கும். இதன் காரணத்தினால் அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்னதாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.


உலகளவில், பச்சை அஸ்பாரகஸ் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அஸ்பாரகஸ் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், முந்தைய காலங்களில் விரும்பி சாப்பிட்ட உணவாக, தற்போது அது எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், பிரிட்டன் போன்ற நாடுகளில், அஸ்பாரகஸ், குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே வளர்கிறது மற்றும் உள்ளூர் பகுதிகள் விளைச்சல் குறைவாக இருப்பதனால் அதனுடைய தேவையும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணத்தினால், அஸ்பாரகஸ் சிறப்பு வாய்ந்ததாகவும், "உணவு நாட்காட்டியில், அஸ்பாரகஸ் பருவக்காலம், மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது". வடக்கு ஐரோப்பா கண்டப் பகுதிகளில் விளையும் வெள்ளை அஸ்பாரகஸ், மிகவும் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், இந்த வகை அஸ்பாரகஸை, "வெள்ளைத் தங்கம்" என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் பனித்துளிகளுடன் காணப்படுகின்றன.

அஸ்பாரகஸை குறித்த ஜெர்மன் தாவரவியல் விளக்கப்படம்

மருத்துவ குணம்

இரண்டாம் நூற்றாண்டு மருத்துவரான காலென், அஸ்பாரகஸ்ஸை, "சுத்தப்படுத்தும் மற்றும் குணமாக்கும்" திறனுடையது என்று விவரித்துள்ளார்.


அஸ்பாரகஸில் குறைவான கலோரியும், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம்நிறைந்தும் உள்ளது என்று ஊட்டச்சத்து ஆய்வுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தண்டுகளில் ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் அதிகமாக உள்ளன. அஸ்பாரகஸ் முக்கியமான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது: அஸ்பாரகஸின் ஆறு காய்களில், 135 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, ஒரு வயதுவந்தவரின் RDIல் பாதியளவு (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உணவு), 545 μg பீட்டா கரோட்டுன் மற்றும் 20மிகி பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது." இந்த குறிப்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்டில்' வெளியானது. இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, ஃபோலேட் மட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது.


ஃபோலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஃபோலேட், குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


குறிப்பாக, பச்சை அஸ்பாரகஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.


இணைப்புத்திசு வெண்புரதம் உடலில் உற்பத்தியாவதற்கும், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள எல்லா செல்கள் மற்றும் திசுக்களை ஒன்றுசேர்த்து பிடித்துக்கொள்ள இணைப்புத்திசு வெண்புரதம் உதவியாக இருக்கிறது. இதன் காரணத்தினால், இது அதிசயப் புரதம் என்று கருதப்படுகிறது.


"அஸ்பாரகஸ் அதனுடைய மருத்துவ குணங்களுக்காக பல காலங்களாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது" என்று டி.ஆன்ஸ்டாட்டால் எழுதப்பட்டது. ஆன்ஸ்டாட் என்பவர், 'ஹோல் ஃபூட்ஸ் கம்பானியன்: அ கைட் ஃபார் அட்வென்சரஸ் குக்ஸ், கியூரியஸ் ஷாப்பர்ஸ் அண்டு லவ்வர்ஸ் ஆஃப் நாட்சிரல் ஃபூட்ஸ்' என்ற நூலின் ஆசிரியராவார்.


"அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது; நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது; மற்றும் சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது."
பயிரிடுதல்
கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது. இந்த செடி சாதாரணமாகத் மற்ற புற்பூண்டுகள் வளராத மண்ணில் தழைத்தோங்குகிறது. ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும். உப்புத்தன்மை நிறைந்திருக்கும் இந்த நிலத்தில் களைகளால் வளரமுடியாது. அஸ்பாரகஸ் சாதரமான நிலங்களில் பயிரிடப்படும் போது களைகள் வளராமல் இருப்பதற்கு, நிலத்தில் உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் வேறு எந்த பயிரும் இந்த நிலத்தில் வளர்க்கப்பட முடியாது. சில நிலங்கள், மற்ற பயிர்களை பயிரிடுவதை விட அஸ்பாரகஸை பயிரிடத் தகுதியானவை. மண்ணின் வளமை, அஸ்பாரகஸ் வளர்வதற்கான மிகப்பெரிய காரணியாக இருக்கிறது. "தாவர முகடுகள்" குளிர்காலத்தில் நடப்படுகின்றன. அதனுடைய முதல் தளிர்கள் வசந்தக்காலத்தில் தான் தோன்றும். முதலில் எடுக்கப்படும் அல்லது "பயிர்கலைக்கப்படும்" செடி ஸ்ப்ரூ அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ப்ரூவிற்கு மெல்லிய தண்டுகள் உள்ளன.


நியூயார்க் நகரத்தில் பச்சை அஸ்பாரகஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளை அஸ்பாரக, ஸ்பார்ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரங்கள், சூரிய ஒளி கொடுக்கப்படாமல் புற ஊதா ஒளி அதிகமாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இது பச்சை வகையை விட கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும். இது நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த நாடுகளில் எல்லாம் வருடத்திற்கு 57,000 டன்கள் (நுகர்வோர் தேவைகளில் 61% ) உற்பத்தி செய்யப்படுகின்றன.


ஊதா நிற அஸ்பாரகஸ், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ஊதா நிற அஸ்பாரகஸ் இத்தாலியில்தான் துவக்கத்தில் மேம்படுத்தப்பட்டது. வைலெட்டோ டி'அல்பெங்கா என்ற பெயர் வகையில்தான் வெளியிடங்களில் விற்கப்படுகிறது. அஸ்பாரகஸின் விதை தயாரிக்கும் வேலைகள், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இன்னும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


வடமேற்கு ஐரோப்பாவில், அஸ்பாரகஸ் உற்பத்திப் பருவம் மிகவும் குறுகியக்காலம் வரைதான் இருக்கும். வழக்கமாக, ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஆரம்பித்து வெயில் காலத்தின் நடுவில் உள்ள ஒரு நாளில் முடிந்துவிடும்.

சக பயிர்வகைகள்

அஸ்பாரகஸை தக்காளிகளுடன் சேர்த்து பயிரிடுதல் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி செடி அஸ்பாரகஸை தாக்கும் வண்டுகளை தடை செய்கிறது. தக்காளியுடன் சேர்த்து பயிரிடப்படும் மற்ற செடிகளுக்கும் இதே போன்ற பாதுக்காப்பை தான் தருகிறது. அதே சமயத்தில் அஸ்பாரகஸ்ஸும், தக்காளி செடிகளை பாதிக்கும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய வேர் உருளைப்புழுக்களை தடை செய்யலாம். 
வணிக ரீதியான உற்பத்தி
2007 ஆம் ஆண்டு வரை, உலகத்திலேயே அஸ்பாரகஸ் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் நாடு பெரு நாடாகும். அதற்கு அடுத்த நிலையில், சீனாமற்றும் மெக்ஸிக்கோ உள்ளது.[16] அஸ்பாரகஸ் இறக்குமதியில் (2004) முதன்மை இடத்தில் இருந்த நாடு அமெரிக்காவாகும் (92,405 டன்கள்). அதற்கு அடுத்தடுத்த இடங்களில், யூரோப்பியன் யூனியன் (வெளிப்புற வணிகம்) (18,565 டன்கள்) மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் (17,148 டன்கள்) இருந்தன. 2005ல் ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தி 218.5 ச.கி.மீs (54,000 acres) ஆக இருந்தது. அந்த உற்பத்தியில் 90,200 டன்கள் விளைச்சல் கிடைத்தது. இதன் மூலம் உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் என்ற பட்டத்தை அமெரிக்கா பெற்றது. சீனா (5,906,000 டன்கள்) மற்றும் பெரு (206,030 டன்கள்) ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். காலிஃபோர்னியா, மிஷிகன் மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களில் அஸ்பாரகஸ் உற்பத்திக் குவிப்பை அமெரிக்க ஒன்றியம் செய்து வந்தது. காலிஃபோர்னியாவின் சேக்ரமெண்டோ-சான் ஜாகுவின் ஆற்றின் சமவெளிப்பகுதியில் போதுமான அளவு பயிர்கள் விளைகின்றன. இதனைக் கொண்டாடும் வகையில் ஸ்டாக்டன் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஹார்ட் மற்றும் மிஷிகன் போன்ற நகரங்களில் விழா கொண்டாடப்படுவது போன்றே கொண்டாடப்பட்டு, பவனி மற்றும் அஸ்பாரகஸ் ராணி தேர்வு ஆகியவை மூலம் விழா நிறைவடையும். ஊஸ்டர்ஷெயரில் உள்ள வேல் ஆஃப் ஈவ்ஷம், வடக்கு ஐரோப்பாவினுள் இருக்கும் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்று மகுடம் சூட்டப்பட்டது. இங்கு ஸ்டாக்டன் போலவே விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், ஒரு முழு வாரமும் கொண்டாடப்படும். அதில் சிறந்த பயிர் ஏலமிடப்படும். ப்ரிட்டிஷ் அஸ்பாரகஸ் விழாவில் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் அஸ்பாரகஸின் தண்டைப் போன்றே உடை அணிவார்கள். நியூரெம்பர்கின் பாவரியன் நகரத்திலும் இதே போன்று நகர விழா கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில், இந்த விழா, ஒரு வாரம் வரை நடத்தப்படும். அந்த நகரத்தின் பகுதியில் உற்பத்தியாகும் வெள்ளை அஸ்பாரகஸ் அதாவது "ஸ்பார்ஜெல்" விளைச்சலைக் கொண்டாடும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.ஸ்பார்ஜெல்லை யார் மிகவும் வேகமாக உரிப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு போட்டி நடத்தப்படும். அந்த போட்டியின் பங்கேற்பாளர்களை பாராட்டி ஆதரவளிப்பதற்காக, மக்கள் உள்ளூர் மதுபானங்களையும் பீரையும் தாராளமாக அருந்துவார்கள்.

தாய்மொழிப் பெயர்கள் மற்றும் சொற்பிறப்பியல்

படிமம்:AsparagusFernMilduraVictoriaAustralia.jpg
மைட்டூராவில் இருக்கும் அஸ்பாரகஸ், விக்டோரியா, ஆஸ்த்திரேலியா.
அஸ்பாரகஸ் அஃபிசினாலிஸ் என்பது பரவலாக "அஸ்பாரகஸ்" என்று தான் அழைக்கப்படுகிறது. இந்த தாவரம் சில நேரங்களில், இதற்கு தொடர்பு இல்லாத மற்ற தாவரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில்ஆர்னிதோகாலம் பைரெனைகம் போன்ற தாவரமும் "அஸ்பாரகஸ்" என்று தான் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் தளிர்கள் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது "ப்ரூஷியன் அஸ்பாரகஸ்" என்று அழைக்கப்படுகிறது.

அஸ்பாரகஸ் என்ற ஆங்கில வார்த்தை பாரம்பரிய லத்தீனிலிருந்து வந்ததாகும். ஆனால் ஒரு காலத்தில் இந்த தாவரம் ஆங்கிலத்தில் ஸ்பெராஜ் என்று அழைக்கப்பட்டது. இந்த வார்த்தை வரலாற்று இடைக்காலத்து லத்தீன் வார்த்தையான sparagus என்பதிலிருந்து வந்தது. இந்த சொல்லே கிரேக்க சொல்லானaspharagos அல்லது asparagos என்பதிலிருந்து வந்ததாகும். அந்த கிரேக்க சொல், பெர்சியன் asparag என்பதிலிருந்து வந்தது. இதற்கு "முளைப்பயிர்" அல்லது "தளிர்" என்று அர்த்தம்.

கனடா, ஸ்காட்ச்வானில் உள்ள முதிர்ந்த அஸ்பாரகஸ் விதை காய்களுடன் உள்ளது.
அஸ்பாரகஸ் சில இடங்களில் "ஸ்பாரோ கிராஸ்" என்று தவறாக அழைக்கப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலிஷ் டிக்ஷனரியில், 1791 ஆம் ஆண்டு ஜான் வாக்கர் என்பவர் எழுதியதாவது "அஸ்பாரகஸில் ஒரு கர்வம் காணப்படும் அளவிற்கு ஸ்பேரோ-கிராஸ் பொதுவாக காணப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். க்ளாஸ்டர்ஷியர் மற்றும் ஊஸ்டர்ஷியரில் இந்த தாவரம், "புல்" என்று தான் அழைக்கப்படுகிறது. சொல்லின் மற்றொரு தெரிந்த பேச்சுவழக்கு வித்தியாசம் என்னவென்றால், "அஸ்பார் கிராஸ்" அல்லது "அஸ்பர் கிராஸ்" என்பதாகும். இது டெக்ஸஸின் பகுதிகளில் மிகவும் பொதுவாக சொல்லப்படுபவையாகும். மத்தியமேற்கு அமெரிக்காவிலும் அப்பலாச்சியாவிலும் "கம்பு புல்" என்பது ஒரு பொதுவான பேச்சு வழக்காகும் பழங்கள் விற்கப்படும் பகுதிகளில் அஸ்பாரகஸ், "ஸ்பாரோஸ் கட்ஸ்" என்று தான் அழைக்கப்பட்டு வருகிறது. இது பழைய சொல்லான "ஸ்பாரோ கிராஸ்" என்பதிலிருந்து சொற்பிறப்பியல் ரீதியாக வேறுபட்டிருக்கிறது. இதன் மூலம், மொழி பல இடங்களிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்திருப்பது தெரிகிறது.

பிரஞ்சு மற்றும் டச்சில் asperge என்றும், இத்தாலிய மொழியில் asparago என்றும், பழைய இத்தாலிய மொழியில் asparagioஎன்றும், போர்ச்சுகீசிய மொழியில் espargo hortense என்றும், ஸ்பானிஷில் espárrago என்றும், ஜெர்மனில் Spargel என்றும், ஹங்கேரியில் spárga என்றும் அழைக்கப்படுகிறது.

அஸ்பாரகஸின் சமஸ்கிருத பெயர் ஷட்டாவரி ஆகும். இது வரலாற்று ரீதியாக இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கன்னடத்தில், இந்த சொல், அஷாதி, மஜிகெகடே அல்லது சிப்பரிபெருபல்லி என்று அழைக்கப்படுகிறது.

அஸ்பாரகஸ், தாய்லாந்தில், no mai farang (Thai: หน่อไม้ฝรั่ง) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "ஐரோப்பியன் மூங்கில் தளிர்கள்" என்பது அர்த்தமாகும். பச்சை அஸ்பாரகஸ் தாய் உணவு வகையில் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர்

அஸ்பாரகஸை உண்பதானால் உண்ணுபவர்களின் சிறுநீரில் ஏற்படும் விளைவுகள் பல காலங்களாக கவனிக்கப்பட்டு வருகிறது:
"அஸ்பாரகஸை உண்பதனால் குமட்டலெடுக்கும் நாற்றத்தை சிறுநீரில் உண்டாக்குகிறது (குறிப்பாக அவை வெண்மை நிறத்தில் இருக்கும் போது அறுக்கப்பட்டால்). இதன் காரணத்தினால், சிறுநீரகத்திற்கு அஸ்பாரகஸ் ஏற்றதாக இருக்காது என்று சில மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்; அஸ்பாரகஸ் பெரியதாகி, கிளைவிட ஆரம்பிக்கும் போது, அது இந்த தரத்தை இழந்துவிடுகிறது; அதனால் இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை"

மார்செல் ப்ராவுஸ் என்பவர், "அஸ்பாரகஸ், என்னுடைய அடுப்பு பானையை வாசனை குடுவையாக மாற்றிவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் பலருக்கு, அஸ்பாரகஸ் சிறுநீரின் நிகழ்வு குறித்து எதுவும் தெரியாது என்று 1950 ஆம் ஆண்டுகளிலிருந்து கண்டறிந்த ஆதாரங்கள் காண்பித்தன. எல்லா (அல்லது சிலர் மட்டுமே) மக்களுக்குமே அந்த நாற்றம் வருகிறதா மற்றும் எல்லா (அல்லது சிலர் மட்டுமே) மக்களுமே அந்த நாற்றத்தை கண்டுபிடிக்கிறார்களா என்ற வாதமிருந்தது.

அஸ்பாரகஸை உண்டவர்களில் சிலர் மற்றவர்களை விட வித்தியாசமாக அது செரித்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணத்தினால் சிலருக்கு அஸ்பாரகஸை உண்ட பிறகு நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியானது. சிலருக்கு அது போன்று வெளியாகவில்லை என்று கருதப்பட்டது. எனினும், 1980 ஆம் ஆண்டுகளில் பிரான்சு, சீனா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்த மூன்று ஆய்வுகளில், அஸ்பாரகஸினால் ஏற்படும் நாற்றத்துடன் கூடிய சிறுநீர், உலகளவில் மனிதர்களுக்கு உள்ள பண்பியல்பாகும் என்று ஆய்வு முடிவில் வெளியிட்டது. இஸ்ரேலில் 307 ஆய்வுக்குட்பட்டவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், 'அஸ்பாரகஸ் சிறுநீரை' மோப்பம் பிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். அஸ்பாரகஸை உண்டவர்களுக்கே அவர்களுடைய சிறுநீரில் உள்ள நாற்றம் தெரியாமல் இருந்தாலும், இந்த ஆய்வுக்குட்பட்டவர்கள், மற்றவர்கள் கழிக்கும் சிறுநீரிலும் இருக்கும் அஸ்பாரகஸ் நாற்றத்தை கண்டுபிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். இந்த ஆய்வின் மூலமாக தான் அஸ்பாரகஸை உண்கிற எல்லோருக்குமே நாற்றம் நிறைந்த சிறுநீர் வெளியாகும் என்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், அஸ்பாரகஸை உண்கிற பெரும்பாலான மக்களுக்கு நாற்றம் நிறைந்த சேர்மம் உடலில் உற்பத்தியாகிறது என்பது உண்மையாகிவிட்டது. ஆனால் 22 சதவீதம் மக்களுக்கு மட்டுமே, அந்த நாற்றத்தை மோப்பம் பிடிப்பதற்கு தேவையான தன்மூர்த்தம் சார்ந்த மரபணுக்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

வேதியல்

அஸ்பாரகஸில் உள்ள சில சேர்மங்கள் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீருக்கு ஒரு வித்தியாசமான நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பலவகையான சல்ஃபரை கொண்டுள்ள, சிதைவு செய்யும் பொருட்களே காரணமாக உள்ளன. இதில் பலவகையான தியோல்கள், தியோ-ஈஸ்ட்டர்கள் மற்றும் அம்மோனியா ஆகியவையும் அடங்கும்.

இந்த நாற்றத்திற்கு காரணமாக இருக்கும் விரைவாக ஆவியாகக்கூடிய கரிமக் கூட்டுப்பொருட்களாவன:
  • மித்தெனெத்தியோல்,
  • டைமெத்தில் சல்ஃபைடு,
  • டைமெத்தில் டைசல்ஃபைடு,
  • பிஸ்(மெத்தில்தியோ)மீத்தேன்
  • டைமெத்தில் சல்ஃபாக்ஸைடு மற்றும்
  • டைமெத்தில் சல்ஃபோன்.
குறிப்பாக பார்க்கும் போது, முதலில் சொல்லப்பட்ட இரண்டும் மிகவும் காரமான (கடுமையான) நெடித்தன்மை உடையதாக உள்ளது. கடைசி இரண்டும் (சல்ஃப்ர்-ஆக்ஸிடைஸ்டு) வாசனையான நறுமணத்தை கொடுக்கும் தன்மையுடையதாக உள்ளது. இந்த சேர்மங்கள் அனைத்தும் சேர்ந்து "மாற்றியமைக்கப்பட்ட அஸ்பாரகஸ் சிறுநீர்" நாற்றத்தைக் கொடுக்கிறது.

இது 1891 ஆம் ஆண்டில் மெர்சிலி நென்கி என்பவரால் முதன் முதலாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. இவர் இந்த வாசனையை மித்தெனெத்தியாலுடன் தொடர்புப்படுத்தி விளக்கினார்.

இந்த சேர்மங்கள் அஸ்பாரகஸிக் அமிலமாக அஸ்பாரகஸில் வினைப்புரிய தொடங்குகின்றன. ஏனெனில் இது அஸ்பாரகஸிற்கு ஒத்திருக்கும் சல்ஃபர் அடங்கிய ஒரே சேர்மங்களாகும். இவை இளம் அஸ்பாரகஸில் அதிகமாக இருப்பதனால், இளம் அஸ்பாரகஸை உண்ட பிறகு, இந்த நாற்றம் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது என்பது கவனிக்கப்பட்ட உண்மையாகும்.

வளர்ச்சிதை மாற்றம்

இந்த சேர்மங்கள் உற்பத்தியாவதற்கான உயிரியல் சார்ந்த இயங்குமுறை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அஸ்பாரகஸை உண்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்களிலேயே சிறுநீரில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று கணக்கிடப்பட்டது. யூனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூவில், டாக்டர். ஆர்.மெக்கலெல்லன் என்பவரால், இந்த ஆராய்ச்சி சரிபார்க்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.
இலையுதிர் காலத்தின் போது அஸ்பாரகஸ் பசுமையாக மஞ்சள் நிறத்தில் மினுமினுக்கிறது.

 


 



பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget