சீமையகத்தி


murugananda.blogspot.com

சீமையகத்தி

வாழிடம்
அறிமுகம்
சீமையகத்தி வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை(தாவரம்) ஆகும். இதன் உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர்சென்னா அலாட்டா (Senna alata). இதன் பழையப் பெயர்,கேசியா அலாட்டா (Cassia alata) என்பதாகும். இத்தாவரம் வாபேசியே(Fabaceae) குடும்பத்தில், சீசல்பின்னியாய்டியே (Caesalpinioideae) துணைக்குடும்பத்தைச் சேர்ந்தது. முன்பு இதனுடையப் பேரினப் பெயர், 'கேசியா' (Cassia)என்பதாகும். தற்போது இதன் பேரினம், 'சென்னா' (senna) என்பதே ஆகும்.
இத்தாவரம் அலங்காரச் செடியாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் அறியப்படுகின்றது. சீமையகத்தி (சீமை=வெளிநாடு + அகம்=உள்ளே + தீ=தீமை) என்றால், 'உடலிலிருக்கும் தீங்கை நீக்கவல்ல வெளிநாட்டுத் தாவரம்' என்பது பொருளாகும்.
இத்தாவரத்திற்க்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி போன்ற வேறுபெயர்களும் உண்டு.
புதர்மெழுகுவத்தி


மெழுகுவத்திப் புதர்இயப்பான்

இத்தாவரத்தினை, ஆங்கிலத்தில்'மெழுகுவத்திப் புதர்' என்றும், மற்றும் சில பெயர்களாலும் அழைக்கின்றனர். மேலும்,தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் பல்வேறு பெயர்களால் . அழைக்கப்படுகிறது.
இதன் கிரான்குவிசுட் தாவரவகைப்பாட்டியல்  

முறை வருமாறு:
 • Domain: Eukaryota
 திணை: Plantae
 பிரிவு: Magnoliophyta
 வகுப்பு: Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
 வரிசை: Fabales
 குடும்பம்: Caesalpiniaceae
 பேரினம்: Senna
 இனம்: Senna alata (L.) Roxb.
வாழிடம்
இதன் தாயகம் மெக்சிகோ நாடாகும். எனினும், இது பெரு வெப்ப மண்டலத் தாவரமாக இருக்கிறது. அதாவது,ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான கண்டங்களிலுள்ள , நாடுகளில்இத்தாவரம் காணப்படுகிறது.
வளரியல்பு
இத்தாவரம், தான் வாழும் இடத்தின் தாவரங்களை விட வேகமாக வளரும் இயல்பைப் பெற்றிருக்கிறது.எனவே, இவை நாட்டிற்க்கு நாடு உருவத்தால் வேறுபாட்டு, அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது.இது 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் 50முதல்80செ.மீ நீளமுடையது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும்  
குணமுடையது. இதன் 'இருபுறவெடிக்கனி' வகையினைச் சாரந்தவிதைகள், நீர் அல்லது விலங்குகள் மூலம் பரவும் இயல்புடையதாகும்.
தென் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. மண் வளமும் ஈரப்பதம்மும் உள்ள ஆற்றுப்படுகைகளில் மிக நன்றாக வளரும் இயல்புடையது. இதனை வெட்டவெட்ட, நன்குத் தழைத்து வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.
மருத்துவ குணங்கள்
§  இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.
§  தோல் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் தீரப் பயன்படுகிறது.
§  இலைகளில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்சில் பயன்படுத்துகிறார்கள்.
§  இதனுடைய தண்டின் பட்டை, இருபாலரின் இனப்பெருக்க மண்டல நோய்களைத் தீர்க்கவும் பயனாகிறது.
§  மலக் கழிவைக் குணப்படுத்தும் மருந்திலும் பயனாகிறது.
§  இதன் பூக்களை நீரில் இட்டு, பின்னர் அதனைக் காய்ச்சி உண்டு வர சிறுநீரகத் தொந்தரவுகள் நீங்குமெனசித்த மருத்துவம் கூறுகிறது.
ஒப்பிட்டறிக
அகத்திக் கீரை

சீமை அகத்தி
புதைப்படிவ காலம்: 520 Ma
PreЄ
Є
O
S
D
C
P
T
J
K
Pg
N
தாவரவியல் வரைவேடு.1880-1883
தாவரவியல் வரைவேடு.1880-1883?
காப்பு நிலை

நிலைபெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது
 (TNC)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(
இராச்சியம்)
தாவரங்கள்
பிரிவு:
பூக்கும்தாவரங்கள்
வகுப்பு
Magnoliopsida
துணைவகுப்பு:
Rosidae
(தரப்படுத்தப்படாத)
Eurosids I
வரிசை:
Fabales
குடும்பம்:
Fabaceae
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
Tribe:
Cassieae
Subtribe:
Cassiinae
பேரினம்:
Senna
இனம்:
S. alata
இருசொற்பெயர்
Senna alata
L & Roxb.
வேறு பெயர்கள்
இலத்தீனிய மாற்றுப்பெயர்கள்
§  Cassia alata L.
§  Cassia alata L. var. perennis Pamp.
§  Cassia alata L. var. rumphiana DC.
§  Cassia bracteata L.f.
§  Cassia herpetica Jacq.
§  Cassia rumphiana (DC.) Bojer
§  Herpetica alata (L.) Raf.


காட்சியகம்

 


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget