கணினித் திரையை வேர்ச்சுவலாக பிரிப்பது எப்படி


நாம் ஒரு கணினித்திரையில் அதிகளவு ஐகோன்களை சேமித்து வைத்துவிட்டு அவசரத்தில் அவற்றுக்குள் தேவையானதை தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுவோம்.அத்துடன் ஒரே மாதிரியான


கணினித்திரையை எத்தனை நாள் பார்ப்பது. சற்று வித்தியாசமாக நாம் வேர்ச்சுவலாக 4 பகுதிகளாக பிரித்து அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை அப்ளிகேசன்களை இட்டு அழகு பார்ப்போமா?

இவ்வாறு மாற்றி பார்க்க ஒரு மென்பொருள் உதவுகிறது .அதன் பெயர் Desktops v1.02. 60KB. தரவிறக்க . தரவிறக்கி நிறுவும்போது உங்கள் ஏற்றுக்கொள்கையின் பின் பின்வருமாறு configuration box வரும்.
இதில் சிவப்பு வட்டமிட்ட பகுதியில் நீங்கள் விரும்பிய குறுக்கு வழியை தெரிவு செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். அவ்வளவுதான் முதல் படத்தில் சிவப்பு அம்புக்குறியிட்டு காட்டியது போல் உங்கள் Task bar ல் புதிய ஐகோன் தென்படும். தற்போது அதன் மேல் கிளிக் பண்ணி உங்களுக்கு Alt+1,Alt+2,Alt+3,Alt+4 குறுக்கு வழிகளை பிரயோகிக்கும் போது தெரியவேண்டிய கணினித்திரையை வடிவமைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான். இதில் என்னுமொரு பயன் உள்ளது தெரியுமா? ஒரு திரையில் திறந்துள்ளவற்றை என்னொரு திரையில் பார்க்க முடியாது. அதாவது அலுவலகத்திலோ வீட்டிலோ மற்றவர் கண்களுக்கு தெரியாத படி நீங்கள் விரும்பியவற்றை பார்க்கலாம்.யாராவது வேண்டாதவர்கள் வருகிறார்கள் என்றால் மறைத்து விட்டு வேறு திரையில் பணியாற்றலாம்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget