எந்நேரமும் புரோகிராம் மற்றும் அதற்கான டிப்ஸ் என படித்து அவற்றை கம்ப்யூட்டரில் அமைத்துப் பார்த்து சரி செய்து கொண்டிருக் கின்றீர்களா? இதோ ஜஸ்ட் ரிலாக்ஸ் செய்திட ஒரு குறிப்பு தருகிறேன். கீழே உள்ள வரியினை அப்படியே எழுத்துப் பிசகாமல் பிரவுசரில் டைப் செய்திடவும். javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i—) {for (j = n; j > 0; j—) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,i);self.moveBy(i,0); } } }} Shw(6)
சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதிய வசதி ஒன்றைத் தொடர்ந்து தருவது அதன் வழக்கமாகும். அண்மையில் தன் ஜிமெயில் தளத் தோற்றத்திற்கு புதுப் பொலிவு கொடுத்துப் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையானதை முன்னிறுத்தி, தேவையற்றதைப் பின்னுக்குக் கொண்டு சென்று, எளிமை யான, மனம் விரும்பும் வகையிலான அனுபவத்தைத் தர நாங்கள் முனைந்துள்ளோம் என்று கூகுள் அறிவித்துள்ளது.