மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் பிசினஸ்மேன் சக்கைப்போடு போடுகிறது. மூன்றே நாளில் 27 கோடியை வசூலித்து சக நடிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாத்தின் இப்போதைய வேலை மகேஷ்பாபுவை பாராட்டுவது மட்டுமே. அவரின்
அருமை பெருமைகளை பேட்டிகளில் தளும்ப தளும்ப எடுத்துரைப்பவர், விரைவில் பிசினஸ்மேன் பார்ட் 2 தொடங்கப்படும் என்கிறார்.
பிசினஸ்மேன் 150 கோடியை வசூலிக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.