ஆபாச வலைத்தளங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள்– அதிர்ச்சி தகவல்


வெளிநாடுகளில் வசிக்கும் 13 முதல் 14 வயதொத்த பள்ளி மாணவர்கள் பலரும் ஆபாசபடங்களை பார்வையிட ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் இன்டர்நெட் மூலமும், டிவிடி, மற்றும் தொலைக்காட்சி சேனல் வழியாக இந்த படங்களை அவர்கள் பார்வையிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.



தகவல் தொடர்புத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி எண்ணற்றோருக்கு சாதகமாக இருந்தாலும், பெரும்பாலோனோருக்கு சாதகமாக உள்ளது. தற்போது இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன், பத்திரிகைகள், "டிவி' "டிவிடி' உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.


மாணவர்கள் ஆர்வம்


அல்பெர்டா பல்கலைக்கழகம் 439 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் 74 சதவிகிதம் பேர் இன்டர்நெட் மூலம் ஆபாசபடங்களை பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். 41 சதவிகிதம் பேர் டிவிடி மூலம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும், 57 சதவிகிதம் பேர் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் இத்தகைய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.


மாணவர்களின் இந்த ஆர்வம் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றது. எனவே பள்ளிகளில் பாலியல் கல்வியை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.


மன அழுத்தம் தரும்


இதேபோல் இங்கிலாந்து நாட்டில் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.


அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது கண்டறியப்பட்டுள்ளது.


மருத்துவர்களை ஆலோசிக்கலாம் 


ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர். ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர். இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியலாளர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget