ஐ.டீ.பீ.ஐ. பெடரல் வங்கியின் புதிய காப்பீட்டு திட்டம் - life insurance

ஐ.டீ.பீ.ஐ. பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் life insurance, ஒரு மாத குழந்தை முதல், 17 வயது வரை உள்ளோருக்கு ஏற்ற "சைல்ட்சூரன்ஸ்- child insurance' என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜி.வி. நாகேஸ்வரராவ் கூறியதாவது:நமது எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும்
குழந்தைகளுக்காக இந்த பிரத்யேக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கல்விச் செலவினங்களை எதிர்கொள்ளும் வகையிலும், திட்டம் பாதிக்கப்படாமல் உறுதிப்படுத்தும் வகையிலும், இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இணை ஆயுள் காப்பீடு, உத்தரவாத லாயல்டி சேர்ப்புகள், கல்வி ஆதரவு பலன், எதிர்கால பிரிமியம்களுக்கான ரொக்கத் தொகை (இறப்பின் போது) மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் கட்டமைந்த நிதி ஒதுக்கீடு ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.கல்வி, திருமணம் மற்றும் வாழ்க்கை இலக்குகள் போன்ற நோக்கங்களுக்கு ஏற்ப, 10 முதல் 25 ஆண்டுகளுக்கு இடையிலான பாலிசி காலத்தை தேர்ந்தெடுக்கலாம். இதற்கான பிரிமியம் ஆண்டுக்கு, 25 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது.இவ்வாறு நாகேஸ்வரராவ் கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget