சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் “கோச்சடையான்”. 3D Motion Capture technology முறையில் எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகை சினேகா மற்றும் நடிகர் ஆதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் சினேகா ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். ஆதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் படக்குழுவினரால் அறிவிக்கப்படவில்லை.
ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை காத்ரீனா கைப் நடிப்பதாக தெரிகிறது. கோச்சடையான் படப்பிடிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடப்பதால் படப்பிடிப்பு ஜனவரி 19ம் தேதியிலிருந்து துவங்கும் என தெரிகிறது.ரஜினி பத்து நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாக செய்தி வெளியானதால் படம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.