காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிக்கும்
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும்
ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைகிறது
66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.