சிரிப்பழகி நாயகிக்கு வில்லி அவதாரம்

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் சினேகா, இந்த வாய்ப்புகாக பல படங்களை கைவிட்டார்.ரஜினியுடன் நடிப்பதே அவர் வாழ்வில் பெரிய மைல்கல் என்று ரசிகர்கள் கருத்து கூறினாலும், ”ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்று புன்னகைக்கிறார் சினேகா. ”என் குறிக்கோளை அடைய பிரசன்னாவுடனான திருமணம் ஒரு தடையாக இருக்காது”  என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் முன்பை விட பளிச்செனவும்,  அழகாகவும் காணப்பட்ட
சினேகாவிடம் முகத்தில் கல்யாண கலை வந்துவிட்டதாக சொல்ல வழக்கம் போல சிரித்துவிட்டு பேச ஆரம்பித்தார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளதால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக கூறும் சினேகா, விரைவில் கோச்சடையான், மற்றும் டைரக்டர் G.N.R.குமரவேலன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொன்னார். தனது வருங்கால கணவரை வாடா போடா என்று அழைப்பதை சினேகா இன்னும் மாற்றிக்கொள்ளவில்லையாம். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget