''உங்க மனைவியை எப்பக் கொல்லப் போறீங்க?''... இப்படிக்கு 'குண்டு இட்லி'


கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் கோவையில் ஒரு கல்லூரிப் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். உங்களது மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள் என்று கேட்டு தனது கள்ளக்காதலருக்கு அவர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது. காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதேபோல கள்ளக்காதலுக்கும் படித்தவர் படிக்காதவர்
என்ற பேதம் இல்லை. நன்கு படித்த, கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வந்த ஒரு பெண் உங்களது மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள் என்று சற்றும் பதட்டமில்லாமல் கேட்டு கடிதம் எழுதியிருப்பது போலீஸாரை அதிர வைத்துள்ளது.


கோவை அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவுதமன். 26 வயதேயாகும் இவர் ஒரு இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி கீதா. கீதா போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அதில்,


நானும், கவுதமனும் காதலித்தோம். இருவீட்டாருக்கும் இது தெரியவந்ததும், பெற்றோர் பேசி முடித்து 21.9.09 அன்று எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது என்னுடைய பெற்றோர் நகையை வரதட்சணையாக அணிவித்தனர். கவுதமனுக்கும் பிரஸ்லெட் நகை போடப்பட்டது.


திருமணத்துக்கு பிறகு கவுதமன் என்னுடன் நெருங்கி பழகுவதை குறைத்தார். அவருக்கு பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கவுதமனிடம் கேட்டபோது `எனக்கு தொழில் செய்ய பணம் தேவைப்படுகிறது. அவள் எனக்கு எல்லாம் தருகிறாள். நான் அவளை விட வேண்டும் என்றால் உன் தாயிடம் போய் ரூ.5 லட்சம் வாங்கி வா' என்று மிரட்டினார்.


இதனால் ஓரளவு நகை, பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் அந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது. இதுபற்றி எனது மாமனார், மாமியாரிடம் கேட்டேன். அவர்களும் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். ஒழுங்காக என்னுடைய மகன் சொன்ன மாதிரி ரூ.5 லட்சம் பணம் வாங்கி வா. இல்லையென்றால் அந்த பெண்ணுடன்தான் அவன் வாழ்வான் என்று கூறினார்கள்.


என்னுடைய கணவர் கவுதமன், கள்ளக்காதலி உமாமகேஸ்வரியுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும் ரகசிய கடிதம் மூலம் தெரியவந்தது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கீதா.


இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் கள்ளக்காதல் கொண்டிருந்தது, மனைவியைக் கொலை செய்ய கவுதமன் திட்டமிட்டது, தாய் தந்தையுடன் சேர்ந்து வரதட்சணைக் கொடுமை செய்தது ஆகியவை உறுதியானது.


இதையடுத்து போலீஸார் கவுதமனையும், உமா மகேஸ்வரியையும் கைது செய்தனர். கவுதமனின் பெற்றோர் பாலசுந்தரம், சரோஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


'ஜில்லுன்னு ஒரு காதல்' போல இருக்கக் கூடாது!


இதற்கிடையே, உமா மகேஸ்வரி, கவுதமனுக்கு எழுதிய ஒரு கடிதம் போலீஸார் கையில் சிக்கியுள்ளது. அதில்தான் கவுதமனின் கொலைச் சதித் திட்டம் இடம் பெற்று இருவரையும் மாட்டி விட்டுள்ளது.


அந்தக் கடிதத்தில் உமா மகேஸ்வரி எழுதியிருப்பதைப் பாருங்களேன்...


குண்டு இட்லியே என்று என்னை நீங்கள் வர்ணிப்பீர்கள். நீங்கள் மட்டும் எப்போதும் ஸ்மார்ட்டாக இருங்கள். நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்.


என்னை ஏன் தவிக்க விடுகிறீர்கள். என்னை விட்டு நீங்கள் போகிற நேரத்தில் நான் அனுபவிக்கும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. என்னை ரொம்ப கஷ்டப்படுத்துகிறீர்கள்.


அவுங்க (அதாவது கவுதமனின் மனைவி கீதா) போன் பண்ணினா உடனே என்னை விட்டு விட்டு ஓடிப் போய் அவசரமாக பேசுகிறீர்கள். என்னுடன் மட்டும்தான் படுக்கையை பகிர்ந்துக்கணும்.


எப்போது உமா கவுதம் ஆகப் போகிறீர்கள். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அக்ஷதா என்று இப்போதே பெயரிட்டு விட்டேன்.


ஜில்லுன்னு ஒரு காதல் படத்தின் கதை போல நமது கதை உள்ளது என்று அடிக்கடி நீங்கள் கூறுவீர்கள். ஜில்லுன்னு ஒரு காதல் கதை போல இல்லாமல் கீதாவை கொன்று விடப் போவதாகவும் நீங்கள்தான் கூறினீர்கள். கீதாவை எப்போது கொல்லப் போகிறீர்கள். என்னுடன் நிரந்தரமாக எப்போது வாழப் போகிறீர்கள்.


நீங்கள் சொன்னதை சீக்கிரம் செய்யுங்க. நாம சந்தோஷமாக இருக்கலாம்.


உங்கள் அன்புள்ள குண்டு இட்லி.


கொடுமை...!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget