தேவாவைக் குடையும் தாரா!


கடந்த ஜூலை மாதமே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள், மும்பையில் செட்டியாலக் போகிறார்கள் என்று நயன்தாரா - பிரபு தேவா குறித்து பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருந்தன.


பி்ன்னர் நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்யம் வெளியாக வேண்டியிருப்பதால், அதுவரை திருமணம் தள்ளிப்போவதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையில், விவாகரத்து செய்ய முதல் மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் பிரபு தேவா அடிக்கடி தங்குவதால், நயன்தாரா கோபித்துக் கொண்டு பிரபு தேவாவை விரட்டிவிட்டார் என்றும் செய்தி வந்தது.


பின்னர் சமாதானமாகிவிட, மீண்டும் கல்யாண வதந்திகள் தொடர்ந்தன. அந்த வரிசையில் இதோ இன்னும் ஒன்று...


திருமணம் தள்ளிப் போவதால் கடுப்பாகிவிட்ட நயன்தாரா, பிரபு தேவாவுடன் மீண்டும் சண்டை போட ஆரம்பித்துள்ளாராம். 


இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குள் திருமணம் நடந்தாக வேண்டும் என்றும், பிப்ரவரிக்குள் கல்யாண தேதியை அறிவிக்குமாறும் நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளதாகவும், பிரபு தேவா இன்னும் மவுனமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். 


பிரபு தேவா இப்போது இந்திப் படம் ஒன்றை இயக்கிவருகிறார். நயன்தாரா புதிய பட வாய்ப்புகள் அனைத்தையும் மறுத்துவிட்டு வீட்டிலிருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget