அனன்யாவை மணக்கிறார் ஆஞ்சநேயன்!


நடிகை அனன்யா திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணக்கவிருக்கிறார்.


மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் நடிகை அனன்யா. நாடோடிகள் படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர். சீடன், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இரவும் பகலும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்தால் பெற்றோர் பார்ப்பவரைத் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபர் அவரை பெண் பார்க்க வந்தார். இரு வீட்டாருக்கும் பிடித்துப்போகவே திருமணம் நிச்சயமாகியுள்ளது.


இது குறித்து அனன்யா கூறியதாவது,


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயன் குடும்பத்தினர் என்னை பெண் பார்க்க வந்தனர். எங்கள் வீட்டாருக்கு பிடித்ததால் சம்மதம் சொன்னோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதா, இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget