ரீமா சென்னுக்கு அவரது வருங்கால கணவர் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார். அதில் சென்று நடிகர், நடிகைகளுக்கு கல்யாண பத்திரிகை வைக்கிறார் ரீமா. மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்குக்கும் வரும் மார்ச் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. தன்னுடன் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ரீமா சென்
தனது திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார். திருமண நிகழ்ச்சி மெஹந்தி விழா, சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் மற்றும் வரவேற்பு என 4 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது. காதலர் தினத்தன்று ரீமாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருந்தார் சிவ் கரண். விமான நிலையத்தில் ரீமா சென்று இறங்கியதும் அவரை வரவேற்க புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் காத்திருந்தது. பிங்க் நிறத்திலான பலூன்களுடன் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த காரை காதலர் தின பரிசாக ரீமாவுக்கு அளித்தார்