ரிச்சா கங்கோபத்யாய நடிக்கவிருந்த தெலுங்கு படமான ஷேடோவில் அம்மணிக்கு டாட்டா காட்டிவி்ட்டு டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷின் புதிய படம் ஷேடோ. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரிச்சா கங்கோபத்யாயவிடம் கேட்டுள்ளனர். அவரும் கதை கேட்டு,
சம்பளம் பேசி, டேட் கொடுத்து நான் ரெடி எப்ப ஷூட்டிங் போகலாம் என்றிருந்தார்.
பெரிய ஹீரோவுடன் நடிக்க சான்ஸ் கிடைத்ததில் ரிச்சா ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். கதைப்படி அவர் மாடர்னாக வர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அமெரிக்காவில் வளர்ந்த அவருக்கா மாடர்னாக இருக்க சொல்லித் தர வேண்டும். அதனால் அசத்திவிடலாம் என்றிருந்தார்.
இந்த நிலையில், திடீர் என்று வந்து ரிச்சா நீங்கள் வேண்டாம் உங்களை விட நடிகை டாப்ஸி ரொம்ப 'ரிச்சா', நல்ல மாடர்னாகத் தெரிகிறார். அதனால் நாங்கள் அவரையை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட ரிச்சாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாம். டாப்ஸி தமிழில் மட்டும் தான் போர்த்திக் கொண்டு வருகிறார். தெலுங்கில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துக் கொண்டிருக்கிறார். டாப்ஸி மட்டுமல்ல பல நடிகைகள் தமிழில் அடக்க ஒடுக்கமாக வந்துவிட்டு, தெலுங்கில் ஃப்ரீயாக நடிக்கின்றனர்.
ரிச்சாவைவிட டாப்ஸி அவ்ளோ 'ரிச்சா'..? நம்ப முடியவில்லையே!