டைம்லைன் பக்கத்தை அனைவருக்கும் கட்டாயமாக்க உள்ளது ஃபேஸ்புக். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயத்தினை ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி பார்க்கும் ஓர் வசதியை டைம்லைன் மூலம் ஏற்படுத்தியது ஃபேஸ்புக்.
இந்த டைம்லைன் பக்கம் சிலருக்கு பிடித்தும், சிலருக்கு பிடிக்காமலும் இருந்தது. இதனால் டைமலைனை விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் இந்த டைம்லைன் பக்கத்தினை ஃபேஸ்புக் அக்கவுன்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இன்னும் 30 நாட்களில் கட்டாயமாக்குகிறது ஃபேஸ்புக்.
60 புதிய அப்ளிக்கேஷன்கள், ஆட் டூ மேப், லிஸன் டு மியூசிக் போன்ற வசதிகளையும் இந்த டைம்லைனில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.