சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்குள் ரஜினி தனது அடுத்த படத்திற்கான கதையை ஓகே செய்துவிட்டாராம். கே.வி ஆனந்திடம் கதை கேட்ட ரஜினி அவர் படத்தில் நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாராம். கே.எஸ் ரவிகுமாரின் ராணா படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்ட எராஸ் இண்டர்நேஷனல் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.
ராணா படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைவரும் இந்த படத்தில் இருக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரைத் தவிர.
ரஜினி மகள் சௌந்தர்யாவிற்கு கோச்சடையான் படத்தில் உதவி செய்து கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமாரின் படம் தான் ராணா.